தமிழ்நாடு
சரக்குக்கு சைடிஸ் எங்கடா?.. நண்பனை போட்டு தள்ளிய தந்தை, மகன் கைது

தூத்துக்குடி மாவட்ட சாத்தன்குளம் அருகேயுள்ள தஞ்சை நகரத்தில் வசிப்பவர் அருமைக்கொடி(58). அதேபகுதியில் வசிக்கும் செல்வராஜ்(54) இருவரும் நண்பர்கள் ஆவர். கடந்த 2ம் தேதி புதுக்குளம் எனும் பகுதியில் அருமைக்கொடி, செல்வராஜ் மற்றும் செல்வராஜின் மகன் தாவீது(24) மூவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் செல்வராஜும் ,அவரது மகனும் அருமைக்கொடியை துண்டால் கழுத்தை நெறித்து, கல்லால் தாக்கியும் கொலை செய்துவிட்டு தலைமறைவாகினர்.
தகவலறிந்த சாத்தான்குளம் போலீசார் அருமைக்கொடி உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தனிப்படை அமைக்கப்பட்டு தப்பியோடிய செல்வராஜையும், அவரது மகனையும் கைது செய்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலம் போலீசாரையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
செல்வராஜும்,அருமைக்கொடியும் ஒன்றாக கூலி வேலை செய்து வந்துள்ளனார். சம்பவத்தன்று மது அருந்தலாம் என செல்வராஜை அருமைக்கொடி அழைத்துள்ளார். மேலும், சைடிஸாக ஆட்டுக்குடல் போட்டி வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். அதன்பின் மூவரும் மது அருந்த சென்றுள்ளனர்.
அப்போது போட்டி வாங்கி தருமாறு அருமைக்கொடியை செல்வராஜ கேட்க, வாங்கித்தரமுடியாது எனக்கூறியதோடு, செல்வராஜை அருமைக்கொடி கடுமையாக திட்டியுள்ளார். அதில் ஆத்திரமடைந்த செல்வராஜும், அவரின் மகனும் சேர்த்து அவரை அடித்து கொலைசெய்துள்ளது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, 2 பேரையும் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.





















