வேலைவாய்ப்பு
சிவகார்த்திகேயன் – சாய்பல்லவி படம் எப்போது தொடக்கம்?

நடிகர் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிக்கும் படம் எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். கார்ட்டூனிஸ்ட்டாக சிவகார்த்திகேயன் நடிக்க, அதிதி ஷங்கர் இதில் பத்திரிக்கையாளராக சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கிறார். இதன் முதல் பாடலான ’சீன் ஆ சீன் ஆ’ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரக்கூடிய நிலையில், விரைவில் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்ட இருக்கிறது என்பதையும் படக்குழு அறிவித்தது.
இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன், கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் சாய் பல்லவி ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
இதன் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. கமலின் காஸ்ட்யூம் டிசைனராக இருக்கும் அம்ரிதா ராம் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஆடை வடிவமைப்பாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார். விரைவில் படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.