வேலைவாய்ப்பு
‘ஜவான்’ குறித்து அனிருத்: ‘இது என்னுடைய சிறந்த இசை!’

ஷாருக்கான் நடித்து வரக்கூடிய ‘ஜவான்’ படத்தின் இசை குறித்து அனிருத் பேசியுள்ளார்.
தமிழில் ‘ராஜா ராணி’ படம் மூலமாக அறிமுகமான இயக்குநர் அட்லி தற்போது ஷாருக்கானின் ‘ஜவான்’ படம் மூலமாக பாலிவுட்டில் இயக்குநராக தடம் பதிக்கிறார். நயன்தாரா, யோகிபாபு, விஜய்சேதுபதி என பல தமிழ் நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். நடிகர் விஜய் இதில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க, விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.
‘ஜவான்’ படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருகிறது. சமீபத்தில் நடிகை நயன்தாரா படப்பிடிப்பில் இணைந்தார். ஏப்ரல் மாத இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பும் முடிவடைய இருக்கிறது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என பான் இந்தியா படமாக திரையரங்குகளில் இந்தப் படம் இந்த வருடம் ஜூன் 2ம் தேதியும் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் அனிருத் பாலிவுட்டிலும் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், இந்தப் படத்தில் இருந்து அதிரடியான சண்டைக் காட்சி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரலானது. இந்தப் படம் குறித்தும் இதன் இசை குறித்தும் அனிருத் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்திருப்பதாவது, ‘நான் தீவிரமான ஷாருக்கான் ரசிகன்.
அவருடைய படங்கள் பார்த்துதான் வளர்ந்திருக்கிறேன். இப்போது அவருடைய படத்திற்கே இசையமைக்கிறேன் என்பது பெருமையான விஷயம். இதுவரை நீங்கள் கேட்ட என்னுடைய இசைகளிலேயே ‘ஜவான்’ படத்தின் இசை சிறப்பானதாக இருக்கும்’ எனக் கூறியுள்ளார்.