Connect with us

இந்தியா

வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் எழுத்து வடிவமாக மாற்றும் புதிய அம்சம் அறிமுகம்

Published

on

வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ்களை எழுத்து வடிவமாக மாற்றும் டிரான்ஸ்கிரிப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக சத்தம் நிறைந்த இடங்களில் அல்லது ஒரு வாய்ஸ் மெசேஜை பிறர் முன்னிலையில் கேட்க வேண்டாம் எனும் போது இந்த அம்சத்தை பயன்படுத்தலாம்.

இதனை செயல்படுத்த நீங்கள் முதலில் உங்கள் தொலைபேசியில் உள்ள வாட்சப் செயலியை திறந்து அதில் செட்டிங்ஸ் ஆப்ஷனில் சேட்ஸ் என்பதை தேர்வு செய்யுங்கள். பிறகு வாய்ஸ் மெசேஜ் டிரான்ஸ்கிரிப்ட் என்பதை கிளிக் செய்யவும். இதை எந்த மொழியிலும் மாற்றிக் கொள்ளலாம். இதற்கு செட்டிங்ஸ்-சேட்ஸ்-டிரான்ஸ்கிரிப்ட் லாங்குவெஜ் ஆப்ஷனுக்கு சென்று மொழி தேர்வு செய்து கொள்ளலாம்.

முதலில் உங்களுடைய போனில் வாய்ஸ் மெசேஜ் டிரான்ஸ்கிரிப்ட் எனேபிள் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்யவும். பிறகு ஒரு சேட்டில் உள்ள வாய்ஸ் மெசேஜை டாப் செய்து அழுத்தி பிடிக்க வேண்டும். பிறகு காண்பிக்கப்படும் டிரான்ஸ்கிரைப் ஆப்ஷனை தட்டுங்கள். இப்போது அவை உங்களுக்கு எழுத்து வடிவில் டிஸ்ப்ளே ஆகும்.

ஒருவேளை அந்த கன்டென்ட் நீளமாக இருக்கும் பட்சத்தில் முழுதுமாக பார்க்க உள்ளே உள்ள மெனுவை கிளிக் செய்து மொழியை தேர்வு செய்து பார்க்கலாம்.

மெசேஜில் பேசப்பட்டுள்ள மொழி நீங்கள் தேர்வு செய்த மொழியுடன் ஓத்துப் போகவில்லை என்றால் அது எழுத்து வடிவமாக மாறாது.  வாய்ஸ் மெசேஜில் உள்ள பேக்ரவுண்ட் சத்தம் காரணமாக ஒருசில வார்த்தைகளை அடையாளம் காண முடியாமல் போனாலும் அந்த மெசேஜில் உள்ள மொழிக்கான ஆதரவு வாட்சப்பில் இல்லாவிட்டாலும் உங்களால் அதனை டிரான்ஸ்கிரைப் செய்ய முடியாது.

 

Translate »
Strong contextual links.