செய்திகள்
2026-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது – மகளிர் உரிமை தொகையும் முந்திய தேதியில் வழங்கப்படும்!
Published
11 மாதங்கள் agoon
By
Poovizhi
தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கம் வழங்காமல் இருந்ததால் பெரும் விமர்சனங்களை சந்தித்த அரசாங்கம், இந்த முறையில் ரொக்கம் வழங்க அதிக வாய்ப்புகளுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு தை மாதம் சிறப்பானதாக இருக்கப்போகிறது என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் உரிமை தொகையும், பொங்கல் பரிசு தொகுப்பும் உடனடியாக வழங்கப்படுவதைப்பற்றி மக்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. கடந்த 2025-ம் ஆண்டில் ரொக்கம் வழங்கப்படாமல் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, மற்றும் ஒரு முழு கரும்பு மட்டுமே வழங்கப்பட்டது. இதற்கு பெரும் எதிர்ப்புகள் எழுந்து, இந்த வருடம் ரொக்கம் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
2021-ம் ஆண்டு திமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பில் 1000 ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டது. 2024-ம் ஆண்டில் இதன் அளவு மேலும் அதிகரித்து 2500 ரூபாய் இருந்தது. இந்நிலையில், இந்த வருடம் 5000 ரூபாயாக வழங்கப்படும் என கூறப்படுகின்றது. இதன் மூலம் 11 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும், விடுப்பட்டவர்களுக்கு மகளிர் உரிமை தொகை, 2023-ம் ஆண்டு செப்டம்பர் 15 முதல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், அனைத்து பயனாளர்களின் வங்கிக் கணக்கில் மாதம் 1000 ரூபாய் நேரடியாக செலுத்தப்படுகிறது. தற்போது, டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி முதல் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

பொங்கல் 2026: இந்த ஆண்டு தை பொங்கல் எப்போது? பொங்கல் வைக்க உகந்த நேரம் இதோ!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் நவம்பர் 30க்குள் வெளியாகும் – துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: டிசம்பர் 15 முதல் புதிதாக தகுதியான பெண்களுக்கு ரூ.1000 வழங்க அரசு அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு அறிவிப்பு: தீபாவளி நாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – சட்டப்பேரவையில் முக்கிய மசோதாக்கள் தாக்கல்!

பொங்கலுக்கு முன் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் – உதயநிதி ஸ்டாலின் உறுதி!

மகளிர் உரிமைத் தொகை குறித்த புதிய அறிவிப்பு – உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் தொகை வழங்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!





