Connect with us

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வாரபலன்கள் (அகஸ்ட் 04 முதல் 10 வரை)

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம்:

கால புருஷ தத்துவத்தில் முதல் ராசியாக விளங்கும் மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரம் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் போன்றவை உண்டாகலாம். பழைய பாக்கி வசூலாவதில் தாமதம் உண்டாகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளை சந்திக்க வேண்டிஇருக்கும்.

குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் தலைதூக்கலாம். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம், பிள்ளைகளின் செயல்களால் மனவருத்தம் போன்றவை ஏற்படலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது. மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்கபெறுவீர்கள். உடல் உழைப்பு அதிகரிக்கும். குறிக்கோளற்ற பயணங்கள் உண்டாகும். விழிப்புடன் இருப்பது நல்லது. சுப செலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும்.

பெண்களுக்கு எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனபக்குவம் உண்டாகும். எந்த சூழ்நிலையிலும் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு எப்படி பாடங்களை படித்து முடிப்பது என்ற டென்ஷன் உண்டாகும். காரிய தடை, தாமதம் உண்டாகலாம்.

பரிகாரம்: மாரியம்மனை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:, செவ்வாய், புதன்

******************************************************************************

ரிஷபம்:

கால புருஷ தத்துவத்தில் இரண்டாவது ராசியாக விளங்கும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த வாரம் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் சுமூகமாக செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்யவேண்டி இருக்கும். வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று கூட தோன்றலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது.

குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்படலாம். பிள்ளைகள் கல்விக்கான செலவு அதிகரிக்கும். அத்துடன் தேவையானவற்றையும் வாங்கி தருவீர்கள். சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். மனதில் இருந்த கவலை நீங்கி நிம்மதி  கிடைக்கும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம். வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம்.

பெண்கள் அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் வரலாம்.

மாணவர்கள் மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். வீண் விவகாரங்களை விட்டு விலகுவது நல்லது.

பரிகாரம்:  கந்தசஷ்டி கவசம் படித்து முருகப் பெருமானை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். குடும்ப பிரச்சனைகள் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:, வெள்ளி, வியாழன்

மிதுனம்:

கால புருஷ தத்துவத்தில் மூன்றாவது ராசியாக விளங்கும் மிதுன ராசி அன்பர்களே, இந்த வாரம் மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும். வீண் செலவு உண்டாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும்.

தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தேவையான சரக்குகளை வாங்குவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிசுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன்மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர் ஆதரவு கிடைக்கும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக் கிழமையில் நெய்தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். செயல் திறமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:, புதன், வெள்ளி

கடகம்:

கால புருஷ தத்துவத்தில் நான்காவது ராசியாக விளங்கும் கடக ராசி அன்பர்களே, இந்த வாரம் பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.

தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் தாமதப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகலாம்.

குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது.

பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. எதிலும் கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்ற மடைய கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.

பரிகாரம்: சனி பக வானை வணங்கி காகத்திற்கு எள் சாதம் வைத்து வர உடல் ஆரோக்கிய மடையும். வீண் அலைச்சல் குறையும். கடினமான பணிகள் எளிதாக முடியும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:, திங்கள், செவ்வாய்

சிம்மம்:

கால புருஷ தத்துவத்தில் ஐந்தாவது ராசியாக விளங்கும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த வாரம் வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள்.

குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு மாறும். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும். பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள்விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும்.

பெண்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும்.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும்.

பரிகாரம்: ஸ்ரீகுருவாயூரப்பனை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். மன மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:, ஞாயிறு, புதன்

கன்னி:

கால புருஷ தத்துவத்தில் ஆறாவது ராசியாக விளங்கும் கன்னி ராசி அன்பர்களே, இந்த வாரம் காரிய அனுகூலங்கள் ஏற்படும். மனோதிடம் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டு சரியாகும். பணவரத்து தடைபட்டாலும் வந்துசேரும். வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் போது கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது. இயந்திரங்களில் பணி புரிபவர்கள் ஆயுதங்களை கையாள்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது செயல்படுவது அவசியம்.

குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்து பேசுவதை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நல்லது. பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

பெண்களுக்கு கோபம், படபடப்பு குறையும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு உண்டாகலாம்.

மாணவர்களில் உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகும்

பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கும். மன நிம்மதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:, புதன், சனி

************************************************************************************************************

துலாம்:

கால புருஷ தத்துவத்தில் ஏழாவது ராசியாக விளங்கும் துலா ராசி அன்பர்களே, இந்த வாரம் வீண் செலவு ஏற்படும். காரியங்களில் தாமதம் உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். லாபம் கூடும்.  எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  நீங்கள் விட்டுக்கொடுத்து வாழ்வதன் மூலம் சிறப்பான பலன்களை பெறுவீர்கள்.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும். பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க முற்படுவீர்கள். உடற்சோர்வு மன சோர்வு வரலாம். மிகவும் வேண்டியவரை பிரிய நேரிடும். கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது நல்லது. தாய், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.எதிர்பாராத செலவு உண்டாகலாம்.

பெண்களுக்கு எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனகுழப்பம் நீங்கி படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

பரிகாரம்: செவ்வாய், வெள்ளிக்கிழமை களில் துர்க்கை அம்மனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும்.

விருச்சிகம்:

கால புருஷ தத்துவத்தில் எட்டாவது ராசியாக விளங்கும் விருச்சிக ராசி அன்பர்களே,  இந்த வாரம் தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்தி தரும்.

தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இது வரை இருந்த தொய்வு நீங்கும். லாபம் அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். நீங்கள் பிரச்சனையை கண்டு பயப்படமாட்டீர்கள்

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். வாக்கு வன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். அறிவுத்திறன் அதிகரிக்கும். பெயரும், புகழும் கூடும்.

பெண்கள் திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். சக மாணவர்களுடன் நல்லுறவு காணப்படும்.

பரிகாரம்:  பவுர்ணமி அன்று நவகிரகத்தில் சுக்கிரனை பூஜிக்க வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:, செவ்வாய், திங்கள்

தனுசு:

கால புருஷ தத்துவத்தில் ஒன்பதாவது ராசியாக விளங்கும் தனுசு ராசி அன்பர்களே, இந்த வாரம் திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாக கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். அவர்களை அனுசரித்து செல்வது நன்மையைத் தரும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம்  வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது. எதிர்பாராத வீண் செலவு ஏற்படலாம். வீண்பழி வரவாய்ப்பு உள்ளதால் எதிலும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது  அவசியம்.

பெண்கள் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஆண்டாள் சமேத ஸ்ரீ ரங்கமன்னாரை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். செல்வ செழிப்பும், ஆரோக்கியமும் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:, வியாழன், வெள்ளி

மகரம்:

கால புருஷ தத்துவத்தில் பத்தாவது ராசியாக விளங்கும் மகர ராசி அன்பர்களே, இந்த வாரம் உடல் ஆரோக்கியம் உண்டாகும். உங்களுக்கு எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமையும் இருக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். லாபம் குறையக்கூடும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது.

குடும்ப நிம்மதி குறையக்கூடும். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான நிலை ஏற்படும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும்.

பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகாரிக்கும். பயணம் செல்ல நேரலாம்.

மாணவர்கள் கவன தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் கூடும்..

பரிகாரம்: ஸ்ரீமகா கணபதியை பூஜித்து வழிபட்டு வர எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:, சனி, புதன்

கும்பம்:

கால புருஷ தத்துவத்தில் பதினொன்றாவது ராசியாக விளங்கும் கும்ப ராசி அன்பர்களே, இந்த வாரம் கோபமான பேச்சு, டென்ஷன் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். லாபம் அதிகாரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டாகும். வேலைப்பளு குறையும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும்.பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷத்தை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி திருப்தியடைவீர்கள். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும்.

பெண்களுக்கு மனதில் துணிச்சல் அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள். உங்களுக்கு தேவையான உதவி அடுத்தவரிடம் இருந்து கிடைப்பது அரிது.

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது வேகம் பெறும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்கி வருவது எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் சாதகமான நிலை காணப்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:, சனி, செவ்வாய்

மீனம்:

கால புருஷ தத்துவத்தில் பன்னிரெண்டாவது ராசியாக விளங்கும் மீன ராசி அன்பர்களே, இந்த வாரம் வீண் வாக்குவாதங்கள் உண்டாகலாம். மனதில் உற்சாகம் ஏற்படும். வீண்பகை உண்டாகலாம்.

தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் ஏற்படலாம். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது. கடன் கொடுக்கும்போது கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண்அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும்.

குடும்பத்தில் ஏதாவது சில்லறை சண்டைகள் ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் கவனமாக செயல்படுவது நல்லது.

பெண்கள் சமையல் செய்யும்போது கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது.

மாணவர்களுக்கு இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. பாடங்களை கவனமாக படிப்பது நல்லது..

பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சநேயரை வியாழக்கிழமையில் வெண்ணெய் சாற்றி வணங்க மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:, வியாழன், சனி

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 மணி நேரம் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா1 மணி நேரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

இந்தியா7 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா8 மணி நேரங்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized2 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

Uncategorized2 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Translate »
Weblogspace welcomes original, informative and useful articles from writers, bloggers, professionals and contributors..