தமிழ்நாடு
காலிங் பெல்லை அடித்து வாஷிங் மிஷினை கொடுப்பேன்: அமைச்சர் உதயகுமார்

வீட்டின் காலிங் பெல்லை அடித்து வாஷிங் மிஷினை கொடுப்போம் என அமைச்சர் உதயகுமார் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசியுள்ளார்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு வாஷிங் மெஷின் கொடுக்கப்படும் என உறுதிமொழி கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் அதிமுகவுக்கு இல்லத்தரசிகளின் ஓட்டு குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் மதுரை திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் பேசியதாவது: இன்னும் 10 ஆண்டுகளுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி அவர்களை அந்த பதவியிலிருந்து யாராலும் அகற்ற முடியாது. அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எனவே மீண்டும் முதல்வராக பழனிச்சாமி தான் தேர்ந்தெடுக்கப்படுவார்.
உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் இந்த அமைச்சர் உதயகுமார் நேரடியாக உங்கள் வீட்டிற்கு வந்து காலிங்பெல்லை அடித்தவுடன் கதவைத் திறந்ததும் வாஷிங்மெஷினை கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.
மேலும் கேபிள் இணைப்புக்கான மாதாந்திர தொகையை இனி ஓபிஎஸ் ஓபிஎஸ் ஆகிய இருவரும் இணைந்து மக்களுக்கு வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார் அமைச்சரின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


















