சினிமா
வயசான ஆன்ட்டின்னு கிண்டல் பண்ண ரசிகர்கள்; சத்தியமா 27 தான்னு டென்ஷனான பிரபல விஜே!

அதிகமாக வாய் பேசினால் தான் விஜேவாகவே ஆக முடியும். ஆனால், மற்ற விஜேக்களை முந்தும் அளவுக்கு முழு வீச்சில் வாயாடும் விஜே பார்வதி இளைஞர்களின் ஃபேவரைட்டான விஜேவாக வலம் வருகிறார்.
சமீபத்தில் தனது 27 வது பிறந்தநாளை கொண்டாடிய விஜே பார்வதி தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன ரசிகர்களுக்கு நன்றி என தமிழ் புத்தாண்டு அன்று போட்ட ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

#image_title
பொய் சொல்லாதீங்க பாரு, உங்களுக்கு 37 வயசு ஆகுது, இப்போ போய் 27 வயசுன்னு சொல்றீங்களே என ஏகப்பட்ட ரசிகர்கள் அவரது ட்வீட்டுக்கு கீழ் கமெண்ட் போட்டு மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
இதனால் ஒரு கட்டத்தில் கடுப்பான விஜே பார்வதி, அதிகமாக பேசுவதால் எனக்கு நிறைய வயசு இருக்கும் என்றும் நான் பெரிய பொண்ணுன்னு நினைச்சிடாதீங்க, சத்தியமா சொல்றேன் எனக்கு 27 வயசு தான் என தற்போது புதிய ட்வீட் போட்டு புலம்பித் தள்ளி உள்ளார் விஜே பார்வதி.

#image_title
ஆன்ட்டி என்று ரசிகர்கள் விஜே பார்வதியை தொடர்ந்து கலாய்த்து வரும் நிலையில், ஹிப் ஹாப் ஆதியுடன் இணைந்து ஆன்ட்டி கான்செப்டில் தான் செய்த வீடியோ வைரலான நிலையில் தான் பலரும் இப்படி தன்னை அழைக்கின்றனர் என்றும் ரொம்பவே சின்னப் பொண்ணுங்க வெறும் 27 வயசு தான் ஆகுது, நம்புங்க என கலாய்த்த ரசிகர்களை கடுகடுக்காமல் கெஞ்சி உள்ளார்.
ஆனால், விஜே பார்வதியின் அந்த ட்வீட்டையும் பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் நம்ப முடியாது நீங்க எங்களுக்கு ஆன்ட்டி தான் என்றும் உங்களுக்கு 22 வயசுன்னு நினைச்சேனே ப்ச்ச்.. என்ன விட 5 வயசு பெரிய பொண்ணுன்னா கல்யாணம் பண்ண முடியாதே என கிண்டல் செய்தும் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.