சினிமா செய்திகள்
விஷ்ணுவிஷாலின் ‘காடன்’ படத்தின் அட்டகாசமான டிரைலர்: ரிலீஸ் தேதியும் அறிவிப்பு!

விஷ்ணு விஷால் மற்றும் ராணா டகுபதி நடிப்பில், பிரபுசாலமன் இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வந்த திரைப்படம் ‘காடன்’. ஈராஸ் நிறுவனத்தின் மிகவும் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வந்த இந்த திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது.
மார்ச் 26ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் டிரைலர் சற்று முன் வெளியான நிலையில் இந்த டிரைலரில் உள்ள ஒவ்வொரு காட்சியும் மிரட்டும் வகையில் உள்ளது. கூட்டம் கூட்டமாக வரும் யானைகள், அதனை காட்டில் இருந்து விரட்ட முயற்சிக்கும் அரசியல்வாதிகள், யானைகளை காப்பாற்றத் துடிக்கும் ராணா என டிரைலர் முழுவதும் விறுவிறுப்பான காட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டிரைலரை அடுத்து இந்த படம் மிகப் பெரிய ஹிட்டாகும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விஷ்ணுவிஷால், ராணா டகுபதி, ஜோயா ஹூசைன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சாந்தனு மொயித்ரா என்பவர் இசையமைத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் வெளிவரும் விஷ்ணு விஷாலின் இந்த திரைப்படம் அவரது வெற்றி பெற பட்டியலில் இணையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.