சினிமா செய்திகள்
தளபதி விஜய் வாக்களித்தார்: வைரலாகும் வீடியோ
Published
11 months agoon
By
Shiva
தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்குப்பதிவு காலை 7 மணிமுதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நீண்ட வரிசையில் வாக்காளர்கள் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
அதேபோல் திரையுலக பிரபலங்களும் அரசியல் பிரபலங்களும் இன்று காலை 7 மணிக்கே முதல் நபராக வாக்களித்து வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் தளபதி விஜய் தன்னுடைய வீட்டின் அருகே உள்ள நீலாங்கரை வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். சிவப்பு நிற காரில் கருப்பு மாஸ்க் அணிந்து வந்த அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்த நிலையில் தேர்தல் அதிகாரிகள் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று வாக்களிக்க உதவினார்.
தனது ஜனநாயக கடமையை ஆற்றி முடித்த விஜய் அதன் பின்னர் தனது காரில் வீட்டிற்கு திரும்பினார். விஜய் வாக்களிக்க வந்த போது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை பார்ப்பதற்காக முண்டியடித்ததால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் ஒரு சில தொகுதிகளில் போட்டியிடுவதை அடுத்து விஜய் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர்கள் இந்த தேர்தலில் எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
You may like
-
பிப்ரவரி 1,2,3… பெரிய சம்பவத்துக்கு ரெடியாகுங்க; இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த தளபதி 67 ஹின்ட்!
-
250 கோடி வசூல்! துணிவு படத்தை துரத்தி துரத்தி அடிக்கும் வாரிசு; போனி கபூர் அமைதியோ அமைதி!
-
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியில் கட்சி தலைவர்கள்.. பரபரப்பான தகவல்!
-
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தேதி அறிவிப்பு.. அண்ணாமலைக்கு விட்டுக்கொடுப்பாரா ஈபிஎஸ்?
-
‘தளபதி 67’ படத்தில் 6 வில்லன்கள்.. யார் யார் தெரியுமா?
-
சக்கர பொங்கல்.. வெண் பொங்கலுக்கு நடுவே கரும்பா நிக்கிறாரே.. விஜய் அட்மின் விட்டா ஹீரோவாகிடுவாரு போல!