இந்தியா
பிரசவ அறையில் இருந்தே புகைப்படங்களை பகிர்ந்த பிரபலம்.. நெட்டிசன்களின் ரியாக்சன்..!

பிரபல ஊடகவியலாளர் ஒருவர் தனது மனைவிக்கு பிரசவ நடக்கும்போது பிரசவ அறையில் இருந்தே எடுத்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசியல் ஆய்வாளர் மற்றும் சமூக ஆர்வலரான தெஹ்சீன் பூனவல்லா என்பவர் தொலைக்காட்சி விவாதங்களில் பிரபலமானவர் என்பதும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மோனிகா என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணத்திற்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட பலர் வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார் என்பதும் மனைவியின் கர்ப்ப கால போட்டோஷூட் புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தெஹ்சீன் பூனவல்லா மனைவிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில் அவரது ஆண் குழந்தையை வரவேற்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை எடுத்த புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ளார்.
பிரசவ அறையில் தனது மனைவி உள்ளே செல்வதையும் பிரசவத்தின் போது சிரிப்பது உள்ளிட்ட புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் இந்த உலகத்திற்கு எங்கள் மகனை வரவேற்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் பதிவு செய்து அவர் தனது மனைவி மற்றும் பிறந்த குழந்தையை புகைப்படத்தையும் பகிர்ந்து உள்ளார். மேலும் எங்கள் குழந்தையின் தொப்புள் கொடியை நாங்கள் சேமித்து பத்திரமாக வைத்திருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
We are pleased to announce the arrival of our son ZURVAN- he who rules Time & Fate!
Sending gratitude to the universe! 🧿
Gratitude to the brilliant Docs & the support staff, the procedure was super fun & filled with laughter!
Both @mvadera & ZURVAN are doing magnificent! 🙏🧿 pic.twitter.com/X8jjpBbVID— Tehseen Poonawalla Official 🇮🇳 (@tehseenp) March 1, 2023
சமூக ஊடகங்களில் பல்வேறு தனிப்பட்ட மற்றும் தொழில்முறையை புகைப்படங்களை பகிர்வது வழக்கம் என்றாலும் மனைவியின் பிரசவத்தை கூட அப்பட்டமாக சமூக வலைதளங்களில் பதிவு செய்ய வேண்டுமா என்று நெட்டிசன்கள் காரசாரமாக கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். பிரசவம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் உள்ள ஒரு தனிப்பட்ட மகிழ்ச்சி என்றும் அதை பொதுவெளியில் வெட்ட வெளிச்சமாக்குவது விளம்பரப் பிரியத்தையே காட்டுகிறது என்றும் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.