வைரல் செய்திகள்
இனி ஒர்க் ஃப்ரம் ஹோம் கிடையாது. ஸ்ட்ரெயிட்டா ஆக்ஷன்தான். புலி வெளியே வரப்போகுதாம்ல…

பரந்துார் விமான நிலைய எதிர்ப்பு போராளிகளை நேரில் சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் அனுமதி கிடைத்து விட்டது. அதனால் அக்கட்சியின் தலைவர் ஒரே புலிப்பாய்ச்சலாக பரந்துார் போகக் போகிறார்.
இன்று போராட்டத்தின் 908 ஆவது நாள். புலி பாய அனுமதி கோடுத்த காவல் துறை அது எப்படி பாய வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார்களாம்.
போராடும் மக்களை விஜய் சந்திக்க வரும்போது அவருடைய பாதுகாப்பு கருதி நிகழ்ச்சியை திருமண மண்டபத்தில் நடத்த வேண்டும் என்று போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர். ஆனால் போராட்டக் குழு காவல்துறையின் கட்டுப்பாடுகளை மறுத்து இந்த நிகழ்ச்சியை ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள அம்பேத்கார் திடலில் நடத்த அனுமதி கோரியுள்ளனர்.
விஜயை சந்திக்க வரக்கூடிய ஏராளமான பொதுமக்களை திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படக்கூடும். எனவே, போலீசாருக்கும் போராட்டக் குழுவினருக்கும் ஒருமித்த கருத்து ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறைகளைச் சார்ந்த உயர் அதிகாரிகளிடம் காவல்துறை ஆலோசனை நடத்தி வருகிறதாம்.
சமீபத்தில் புஷ்பா 2 பட வெளியீட்டின்போது நடிகர் அல்லு அர்ஜீன் வந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததைப் போன்ற துயர சம்பவங்கள் ஏற்படாமல் காக்க காவல்துறை மிகுந்த பிரயத்தனங்களை செய்ய வேண்டி இருக்கும்.
என்னதான் விஜய் தலைவர் என்றாலும் மக்கள் அவரை ஒரு நடிகராகத்தான் பார்ப்பார்கள். அதனால் கண்டிப்பாக கூட்ட நெரிசல் எற்படத்தான் செய்யும். மேலும் மழை வேறு பெய்யத் தொடங்கியிருக்கிறது. சூட்டிங் மழையில் மட்டுமே நனைந்து வந்த விஜய் இப்போது நிஜ மழையில் நனைவாரா…
இதனால் விஜய் பரந்துார் வருவாரா அல்லது பரந்துாரை பனையுருக்கு வரச் சொல்வாரா என்பதும் கேள்விக் குறியாகவே உள்ளது.
என்னைய இப்படி உசுப்பி விட்டு உசுப்பி விட்டே ரணகளமாக்குறீங்களேடா என்று வடிவேல் சலித்துக் கொண்டதைப் போல விஜயும் சலித்துக் கொள்வாரா.. விஜயின் வருகை கண்ணி வெடியாக இருக்குமா… புஸ்வாணமாகப் போகுமா.. பொறுத்திருந்து பார்ப்போம்.
