வைரல் செய்திகள்
சென்னை டு பெங்களுரு விரைவு வழிச்சாலை பணி ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு ரத்து செய்தது… அவ்வளவுதானா.. என்ன ஆச்சு?…
சென்னை – பெங்களுரு விரைவுச்சாலை ஒப்பந்தத்தை NHAI ரத்து செய்து விட்டது. தமிழ்நாட்டில் 106 கி.மீ. ஆந்திரப் பிரதேசத்தில் 85 கி.மீ. கர்நாடகாவில் 71 கி.மீ. என மொத்தம் 262 கி.மீ. நீளமுள்ள இந்த சாலை கிட்டத்தட்ட 18,000 கோடி ருபாய் செலவில் போடப்பட NESCO நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம்தான்
செய்யப்பட்டுள்ளது. 2021ல் தொடங்கப்பட்ட இந்த சாலைப்பணிகள் 2023ல் டிசம்பரில் முடிக்கப்பட வேண்டும் என முதலில் உத்தரவிட்டிருந்தது. இதற்கான நிலம் எடுப்புப் பணிகள் தாமதம் மற்றும் பல்வேறு வழக்குகள் இடைஞ்சல்கள் காரணமாக 2024 அக்டோபர் முதல் டிசம்பருக்குள் முடிக்கப்பட வேண்டும் என மறு உத்தரவிடப் பட்டிருந்தது.
கா்நாடகாவில் 71 கி.மீ. பணிகள் முடிவு பெற்று நவம்பர் 2024ல் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் பணிகள் முடிவடையாத நிலையில் NESCO நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை NHAI தற்போது ரத்து செய்து வேறு ஒரு புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தனது பணிகளை ஜனவரி 2025 இறுதிக்குள் தொடங்கி ஆகஸ்ட் 2025க்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 18 சிறு பாலங்கள் முன்று முக்கிய இடங்களில் பறக்கும் மேம்பாலங்கள் மற்றும் ஒரு இடத்தில் கோயில் அகற்றும் பணி ஆகியவை இன்னமும் முடிக்கப்படாத நிலையில் இந்த விரைவு வழிச்சாலை மக்களின் போக்குவரத்து சிரமங்களை குறைக்கக்கூடிய வகையில் விரைவில் முடிக்கப்பட்டு நடைமுறைக்கு வரவேண்டும் என்பதே அணைத்து பொது மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாக உள்ளது.
ஏற்கனவே சென்னையிலிருந்து பெங்களுருக்கு உள்ள முன்று வழித்தடங்களில் எதில் சென்றாலும் 352 கி.மீ. கடக்க 5 முதல் 6 மணி நேரம் பயண நேரம் ஆகக் கூடிய நிலையில் இந்த சாலை 262 கி.மீ. வெறும் முன்று மணி நேரம்தான் பயண நேரம் என்பதால் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு இந்த சாலை உதவிகரமாக இருக்கும் என்பதால் பணிகள் தொய்வின்றி நடைபெற்று உரிய நேரத்தில் சாலை பயன்பாட்டிற்கு வர வேண்டும் என்றே அணைவரும் விரும்புகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்.


