தமிழ்நாடு
சீக்கிரமே அரசியலுக்கு வாங்க தளபதி.. விஜயை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள்!

சென்னை: சர்கார் படத்தின் பிரச்சனையை தொடர்ந்து, நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் அழைப்பு விடுத்து இருக்கிறார்கள்.
அரசுக்கு எதிரான வசனங்கள் மற்றும் காட்சிகளால் மெர்சலை தொடர்ந்து சர்கார் படம் பெரிய வைரல் ஆகியுள்ளது. தீபாவளியன்று விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் வெளியானது.
அதிமுகவினரின் போராட்டம் காரணமாக இந்தியா முழுக்க தற்போது சர்கார் படம் வைரல் ஆகியுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜயை தேர்தலில் நிற்க சொல்லி அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இவர் ”நாட்ல தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் நிறைய உள்ளது. அதை கண்டுக்கொள்ளாமல், திரு முருகதாஸ் அவர்களை கைது செய்ய துடிப்பது ஆளும் அரசின் இயலாமையை காட்டுகிறது. தளபதி விஜய் அவர்களின் அரசியல் பிரவேசாம் மிக விரைவில்” என்றுள்ளனர்.



















