Connect with us

சினிமா செய்திகள்

Viduthalai Update: முதல்முறையாக இணையும் தனுஷ்- இளையராஜா… “விடுதலை” படத்தின் புதிய அப்டேட்..!

Published

on

இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை படத்தின் முதல் பாகத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

’வடசென்னை’, ‘அசுரன் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் பிரபல இயக்குநர் வெற்றிமாறன். தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. வேல்ராஜ் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

விடுதலை படத்தின் தயாரிப்பில்  ஆர்.எஸ்.என்ஃபோடைன்மெண்ட், கிராஸ்ரூட் கம்பெனி ஆகிய நிறுவனங்களுடன் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இணைந்துள்ளது. இரண்டு பாகமாக விடுதலை படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், படப்பிடிப்பு முடிந்து போஸ் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கும் நிலையில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் விடுதலை படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பாடல் உருவான வீடியோவை பகிர்ந்துள்ளார். சுகா எழுத தனுஷ் மற்றும் அனன்யா பட் இருவரும் பாடியுள்ள ‘ஒன்னோட நடந்தா’ பாடல் பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

விடுதலை படத்தில் நடிகர் சூரி போலீஸ் வேடத்தில் நடிக்க,விஜய் சேதுபதி போராளியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் அடர்ந்த காடுகள், திண்டுக்கலில் உள்ள சிறுமலை உள்ளிட்ட பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலும் பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?