இந்தியா
வாஜ்பாய் இறப்பை முன்னிட்டுத் தமிழகத்தில் 17ம் தேதி அரசு பொது விடுமுறை அறிவிப்பு..!

முன்னாள் பிரதமர், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான வாஜ்பாய் அவர்கள் உடல் நலம்குன்றி டெல்லி எயிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 2018 ஆகஸ்ட் 16 மாலை 5.05 மணியளவில் காலமானார்.
இதனை அடுத்து இந்தியாவின் பல மாநிலங்கள் நாளை பொது விடுமுறை அறிவித்து வந்த நிலையில் தமிழ் நாடு அரசும் பொது விடுமுறை அறிவித்து அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.















