சினிமா செய்திகள்
பால்கே விருது இவங்களுக்கும் கொடுங்க: வைரமுத்து வேண்டுகோள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சமீபத்தில் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது என்பதும் இதனை அடுத்து ஒட்டுமொத்த திரையுலகமும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, தமிழக ஆளுனர் கே.என்.ரவி, தமிழக முதல்வர் ம்க ஸ்டாலின் உள்பட பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இருப்பினும் ரஜினிகாந்தின் நாற்பதாண்டு நண்பர் என்று கூறப்படும் கமல்ஹாசன், நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா, வைரமுத்து உள்பட ஒருசிலர் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் தாதா சாகேப் பால்கே விருது வாங்கி இரண்டு நாள் கழித்து தற்போது வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி மேலும் சிலருக்கும் தாதாசாகிப் பால்கே விருது கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி அந்த ட்வீட்டில் பதிவுசெய்துள்ளார். வைரமுத்து தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
பால்கே விருது பெற்றதில்
கலை உலகுக்கே
பெருமை சேர்த்துள்ளார்
நண்பர் ரஜினிகாந்த்.
ஊர்கூடி வாழ்த்துவோம்.
கமல்ஹாசன் – பாரதிராஜா – இளையராஜா என்று
பால்கே விருதுக்குத்
தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில்
மேலும் திகழ்கிறார்கள் என்பதையும்
ஒன்றிய அரசின்
கண்களுக்குக் காட்டுவோம்.
பாஜக அரசு கொடுத்த விருது என்பதாலும், பாஜக ஆதரவாளர் என ரஜினியை நினைத்து கொண்டும் திரையுலகில் உள்ள பலர் வாழ்த்து கூறவில்லை என்று கூறப்பட்டு வருகிறது.
பால்கே விருது பெற்றதில்
கலை உலகுக்கே
பெருமை சேர்த்துள்ளார்
நண்பர் ரஜினிகாந்த்.
ஊர்கூடி வாழ்த்துவோம்.கமல்ஹாசன் – பாரதிராஜா – இளையராஜா என்று
பால்கே விருதுக்குத்
தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில்
மேலும் திகழ்கிறார்கள் என்பதையும்
ஒன்றிய அரசின்
கண்களுக்குக் காட்டுவோம். pic.twitter.com/6v5uwWueAq— வைரமுத்து (@Vairamuthu) October 27, 2021




















