தமிழ்நாடு
வைகோவுடன் செல்ஃபி எடுத்ததில் 119050 நிதி திரட்டிய மதிமுக!

மதிமுகவின் வடசென்னை மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட வைகோவுடன் செல்ஃபி எடுத்தது மற்றும் சால்வைக்கு பதிலாக நிதி வழங்கியதில் மதிமுக 119050 ரூபாய் திரட்டியுள்ளது.
கடந்த 8-ம் தேதி மதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கழகப் பொதுச்செயலாளருக்கு, கழகத் தோழர்கள் யாரும் இனி சால்வை அணிவித்தல் கூடாது. சால்வை அணிவிக்க விரும்புவோர் அதற்குப் பதிலாகக் கழகத்துக்கு நிதி வழங்கலாம். கழகப் பொதுச் செயலாளருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள விரும்புவோர் குறைந்தபட்சம் நிதியாக ரூபாய் 100 வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் சால்வைக்குப் பதிலாக வைகோவிடம் தொண்டர்கள் பணம் கொடுத்து செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அதன்மூலம் 119050 நிதியாகக் கிடைத்துள்ளது. இதனையடுத்து இந்த கூட்டத்தில் பேசிய வைகோ, நமது கட்சி என்ன மிட்டா மிராசுகளின், கோடீஸ்வரர்களின் கட்சியா? என்னுடைய மாதச் சம்பளத்தைக் கழக அலுவலகத்துக்குப் பொதுச் செயலாளர், மதிமுக என்ற முகவரியில் அனுப்பும்படி நாடாளுமன்றத்தில் எழுதிக் கொடுத்து விட்டேன். எனக்கு வரும் படியை மட்டும் வைத்து செலவு செய்ய முடிவு செய்திருக்கிறேன் என்றார்.





















