சினிமா
பிக் பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயன்ற மதுமிதா அதிரடியாக வெளியேற்றம்?

பிரபல தமிழ் தொலைக்காட்சி நடத்தும் பிக் பாஸ் 3-வது சீசனில் கலந்துகொண்டுள்ள காமெடி நடிகை மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாகவும், அதன் காரணமாக அவர் அதிரடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
பிக் பாஸ் வீட்டில் மீண்டும் வனிதா எண்ட்ரீ ஆனதில் இருந்து பிக் பாஸ் வீடு மீண்டும் போர்க்களமாக மாறியுள்ளது. வனிதா வந்து கூறிய சில தகவல்களை வைத்து மற்ற போட்டியாளர்கள் மோதிக்கொள்கிறார்கள். குறிப்பாக பிக் பாஸ் வீட்டில் ஆண்கள், பெண்களை யூஸ் பன்னுறாங்க என வனிதா கூறியதை பிடித்துக்கொண்டு மதுமிதா பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்தார்.
இதனை வைத்துக்கொண்டு ஆண் போட்டியாளர்களும் மதுமிதாவை விடாமல் பிடித்துக்கொண்டு சண்டையை இரண்டு நாட்களாக தொடர்ந்துகொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் கேப்டம் பதவிக்கான டாஸ்க்கில் மதுமிதா வெற்றிபெற்று இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மதுமிதாவுக்கும் வீட்டில் உள்ள ஆண் போட்டியாளர்கள் மற்றும் லாஸ்லியாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் இந்த சூழ்நிலையில் மதுமிதா பிக் பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. மேலும் சில தினங்களுக்கு முன்னர் வனிதாவை முகின் தாக்கியதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. அது பிக் பாஸால் ஒளிபரப்பப்படவில்லை என கூறப்படுகிறது.
மதுமிதா தற்கொலைக்கு முயன்று அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டதாக உலா வரும் இந்த தகவல் அதிகாரப்பூர்வமற்ற தகவலாக இருப்பதால் இன்னும் ஒரு சில தினங்களில் இந்த தகவலின் உண்மைத்தன்மை தெரிந்துவிடும்.




















