இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.06.2026.

- இந்திய சினிமாவில் முடிசூடாத திரைக்கதை மன்னராக அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக வெற்றி பெற்ற நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் மறைந்தார். முன்னால் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றம் தற்போதைய முதல்வர் விஜய் ஆகியொர் நேரில் சென்ற அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் நாளை அரச மரியாதையுடன் தகனம் செய்யப்படும். கண்களை தானம் செய்திருந்த்தால் வீட்டிற்க வந்த மருத்துவக் குழுவினர் அவரது கண்களை அகற்றி எடுத்துச் சென்றனர்.
- 7 முதல் 9 ம் வகுப்பு மாணவர்கள் மும்மொழி படிக்கத் தேவையில்லை. தற்போதைய பாடங்களே தொடரும் என சிபிஎஸ்இ இயக்குநரகம் அறிவித்துள்ளது. ஜீலை 1 முதல் அமலாகவிருந்த இந்த முறை அடுத்த ஆண்டு முதல் படிப்படியாக அமல்படுத்தப்படும் என அறிவிப்பு.
- திமுக கூட்டணியில் இருந்து விலகுவது என மதிமுக பொதுக்குழுவில் முடிவு. உதயசூரியன் சின்னத்தில் வென்ற இரண்டு எம்எல்ஏக்களும் திமுகவில் சேர முடிவு.
- அரசு பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும் என அறிவித்த செங்கோட்டையனுக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்ப.
- தமிழ்நாட்டில் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 5 வயதுக்குட்பட்ட அணைத்து குழந்தைகளுக்கம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
- இன்று முதல் புதிய நடைமுறை அமலுக்கு வந்தது! மக்களுக்கு மிகவும் பயனுள்ள முக்கிய அறிவிப்பு! இனி அரசு மருத்துவமனைகளில் ஆதார் மூலம் முன்பதிவு (Online Registration) செய்யும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல், எளிதாக OP சீட்டு (Out Patient Slip) பெற முடியும்.
- கோவை ஈஷா யோகா மையத்தில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மலர்விழி (45) என்ற பெண் விஷம் குடித்து தற்கொலை. போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- (ISRO) இஸ்ரோ நிறுவனத்தை தனியார் மயமாக்க மோடி அரசு முடிவு! அரசு நிறுவனம் ISRO உருவாக்கிய PSLV தொழில்நுட்பம் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்ப்ப.
















