Connect with us

இந்தியா

பட்ஜெட் 2022 | விலை குறையும் உயரும் பொருட்கள் என்ன? உங்களுக்கு கிடைத்தது என்ன? சிறப்பம்சங்கள்..!

Published

on

பட்ஜெட் 2022-2023 சிறப்பம்சங்கள்:

  • பிரதமரின் விரைவு சக்தித் திட்டம் ஏராளமான வேலைவாய்ப்புகளையும், தொழில் வாய்ப்புகளையும் இளைஞர்களுக்கு உருவாக்கும்
  • நாட்டின் தேசிய நெடுஞ்சாலை வரும் நிதியாண்டில் 25,000 கிமீ தொலைவுக்கு புதிதாக அமைக்கப்படவுள்ளது
  • விவசாயிகளுக்கும், தொழில் துறையினருக்கும் உதவி புரியும் வகையில், ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
  • ஒரு ரயில் நிலையம், ஒரு உற்பத்திப் பொருள் என்ற போக்குவரத்துத் திட்டமானது குறிப்பிட்ட ஒரு பகுதியிலான உற்பத்திப் பொருளுக்கு ஊக்கமளிக்கும்
  • அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது
  • *குறு மற்றும் பெரிய பொருளாதாரத்துக்கு வழி வகுப்பது, டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, தனியார் & பொதுத்துறை முதலீடுகளில் கவனம் செலுத்துவதே #AmritMahotsav நோக்கம்
  • 1000 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் கரீப், ரபி பருவ விளைபொருட்கள் வரும் நிதியாண்டில் கொள்முதல் செய்யப்படும், இது ஒருகோடி விவசாயிகளுக்கு பலன் அளிக்கும்
  • ட்ரோன் தொழில்நுட்பம், பயிர் வகைகளை மதிப்பீடு செய்யவும், நில ஆவணங்களை சரிபார்க்கவும், பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டை இறுதி செய்யவும் பயன்படுத்தப்படும்
  •  இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக மாநில அரசுகள் மற்றம் சிறு-குறு- நடுத்தர தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திட்டம் ஒன்று அறிவிக்கப்படும்
  • பள்ளிகளில் கல்வி போதித்தலை மேம்படுத்துவதற்காக உயர்தர மின்னணு வழி கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும்
  • இயற்கை விவசாயம் கங்கை வழித்தடத்தினை மேம்படுத்தும்
  • இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்கீழ் 7 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
  • அடுத்த 3 ஆண்டுகளுக்குள்ளாக 400 வந்தே பாரத் ரயில்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு இயக்கப்படும்
  • திறன் இந்தியா திட்டம் மேம்படுத்தப்பட்டு, அறிமுகப்படுத்தப்படும்
  • ட்ரோன் தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவில் தொடங்கும் திட்டத்தின் கீழ் முன்னுரிமை
  • ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு திட்டத்தின்கீழ் 60,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.  3.8 கோடி இல்லங்களுக்கு இணைப்பு வழங்கப்படவுள்ளது
  • #PMGatiShakti கீழ் அடுத்த சில ஆண்டுகளில் 100 சரக்கு முனையங்கள் உருவாக்கப்படும்
  • பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் 48,000 கோடி ரூபாய் வரும் நிதியாண்டில் ஒதுக்கப்பட்டு வீடுகள் கட்டப்படவுள்ளன
  • மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 3 திட்டங்கள் அறிமுகம், சகி இயக்கம், வாத்சல்யா இயக்கம் மற்றும் ஊட்டச்சத்து 2.0 இயக்கம் ஆகியவை துவக்கம்
  • மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் தொலைபேசி வழியாக ஆலோசனை வழங்கும் மன ஆரோக்கிய திட்டத்திற்கு அனுமதி
  • நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு மகளிர் மேம்பாடுதான் முக்கிய கோட்பாடாக அமையும்
  • #AtmaNirbharBharat இன் ஒரு பகுதியாக உலகத்தரம் வாய்ந்த உள்நாட்டு தொழில்நுட்பமான ’KAWACH’ இன் கீழ் 2000 கி. மீ தூரம் சாலை 2022 – 23 இல் கொண்டுவரப்படும்
  • வடகிழக்கு மாநிலங்களை மேம்படுத்துவதற்காக 1,500 கோடி ரூபாயில் திட்டங்கள்
  • புதிய திட்டத்தின்கீழ் 2 லட்சம் அங்கன்வாடிகளை மேம்படுத்த திட்டம்
  • 75 மாவட்டங்களில் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகளின் கிளைகள் துவக்க திட்டம்
  • மின்னணு பாஸ்போர்ட் வரும் நிதியாண்டிலிருந்து வழங்கப்பட உள்ளது
  • பாரம்பரிய மலைப்பகுதி சாலைகளுக்கான பர்வதமாலா திட்டம், தனியார் பொதுத்துறை கூட்டு முயற்சியின் கீழ் கொண்டுவரப்படும்
  • 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் மின்னணு முறையில் இணைக்கப்பட்டு, பணப் பரிமாற்றத்திற்கு உதவும் வகையில் மேம்படுத்தப்படும்
  • நகர்ப்புற திட்டமிடலை மாற்றியமைக்க குழு அமைப்பு
  • மின்னணு வாயிலான பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு, பள்ளிகளுக்கு இணைப்பு வழங்க திட்டம்
  • சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாத போக்குவரத்து திட்டம் அறிமுகம்
  • வாகனங்களுக்கான மின்கலன்களை மாற்றிக் கொள்ளும் வசதி மேற்கொள்ளப்படும்
  • ரூ. 44605 கோடி மத்திப்பிலான கென் – பெட்வா இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 9 லட்சம் ஹெக்டேருக்கு மேற்பட்ட விவசாய நிலம் பாசன வசதி பெறும். உள்ளூர் மக்கள் மற்றும் விவசாயிகளின் வேளாண்மை, வாழ்வாதார வசதிகள் மேம்படுத்தப்படும்
  • திவால் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்
  • பொது போக்குவரத்தில் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாத தூய்மையான போக்குவரத்துத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
  • ஒன்று முதல் 12 வரையிலான வகுப்புகள் தனித்தனி தொலைக்காட்சி அலைவரிசை, தற்போது 12 ஆக இருக்கும் இந்த அலைவரிசைகள் 200-ஆக உயர்த்தப்படும்
  • துணைக் கல்வி வழங்கும் வகையில், பிராந்திய மொழியிலும் இந்த அலைவரிசைகள் மாணவர்களுக்கு வகுப்பு பாடங்களுக்கு இணையாக இவை போதிக்கும்
  • சிறு & நடுத்தர துறையில் விருந்தோம்பல் சேவையை மேம்படுத்த மார்ச் 2023க்குள் இசிஜிஎல் சேவையை ரூ. 50 ஆயிரம் அளவுக்கு விரிவுபடுத்த அரசு திட்டம்
  • திறன் மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில் டிஜிட்டல் தேஷ மின்னணு வாயிலான இணையதளம் ஏற்படுத்தப்படும்
  • புதிய சட்டங்கள் மூலம் வாயிலாக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மாற்றியமைக்கப்படும்
  • மனநல ஆலோசனைக்கு, தேசிய தொலைதூர மனநல திட்டம் தொடங்கப்படும்
  • ஒப்பந்தங்கள் வாயிலாக கண்ணாடி இழை கேபிள்கள் பதிக்க பொது, தனியார் கூட்டு முயற்சி அடிப்படையில் பணிகள் மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும்
  • நடைமுறைக்கு ஒவ்வாத 1,486 சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளது, இது வர்த்தகம் புரிவதை எளிதாக்கும்
  • நம்பிக்கையின் அடிப்படையிலான அரசை உறுதி செய்ய திட்டம்
  • 68 சதவீத பாதுகாப்பு மூலதன செலவின ஒதுக்கீடு, உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்க திட்டம்
  • முக்கிய துறைகளில் முன்னேற விரும்பும் 102 மாவட்டங்களில் கணிசமான முன்னேற்றம்
  • பெண்கள் சக்தி ஒளிமயமான எதிர்காலத்தை பிரதிபலிக்கிறது
  • கடந்த 2 ஆண்டுகளில் அனைத்து வீடுகளுக்குமான குடிநீர் இணைப்புத் திட்டத்தின்கீழ், 5.5 கோடி இல்லங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு
  • பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் வரும் நிதியாண்டில் கண்டறியப்பட்டுள்ள பயனாளிகளுக்கு 80 லட்சம் வீடுகள் வழங்கப்படும்
  • நகர்ப்புற மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் வகையில் 280 கோடி ரூபாய் செலவில் திறன் மையங்கள் உருவாக்கப்படும்
  • குறைந்த மக்கள்தொகை கொண்ட எல்லைப்புற கிராமங்களில் புதிய எழுச்சிமிகு கிராமங்கள் திட்டத்தின் கீழ் ஓரளவு இணைப்புகள் ஏற்படுத்தப்படும்
  • மின்சார வாகனங்களின் திறனை மேம்படுத்துவதற்கு தேவையான கட்டமைப்பை உருவாக்கவும், வாகனங்கள் மற்றும் மின்கலன்கள் வர்த்தகம் மற்றும் சேவையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கவும் திட்டம்
  • குஜராத்தின் கிப்ட் சிட்டியில் சர்வதேச தீர்ப்பாயத்தை மத்தியஸ்த அமைப்பை உருவாக்க முடிவு
  • மின்னணு வரைகலை தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் வகையிலும், மாணவர்களுக்கு அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், டிஜிட்டல் விளையாட்டுகள் மற்றும் கார்டூன் படங்கள் தயாரிப்பு ஆகியவற்றில் திறனை வளர்க்கவும் திட்டங்களை வடிவமைக்க சிறப்பு பணிக்குழு
  • சுலபமான வாழ்க்கை & எளிதான வணிகம் புரிதலை ஊக்குவிக்க எங்கு வேண்டுமானாலும் பதிவு செய்யும் வகையிலான ’ஒரே தேசம் ஒரே பதிவு’ முறை அமல்படுத்தப்படும்
  • பிளாக் செயின் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மத்திய ரிசர்வ் வங்கி மின்னணு கரன்ஸி (மெய்நிகர் ரூபாய்) இந்த நிதியாண்டில் அறிமுகம் செய்கிறது
  • வரும் நிதியாண்டில் மாநிலங்களுக்கு ஒருலட்சம் கோடி ரூபாய் நிதி அளிக்க மத்திய அரசு முடிவு
  • மாநில அரசுகளுக்கு வழக்கமான கடன்கள் தவிர்த்து வட்டியில்லா நிதியுதவி வழங்கவும் மத்திய அரசு திட்டம்
  • பணம் செலுத்துவதில் ஏற்படும் தாமதத்தை குறைக்க 10 நாட்களுக்குள் 75% பில்லை பணமாக்கும் முறை உருவாக்கப்படும். இதற்காக காகிதமற்ற மின்னணு பில்களை அமைச்சகங்கள் ஏற்படுத்தும்
  • கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் வகையில், பொதுத்துறை திட்டங்களுக்கு பசுமை பத்திரங்கள் வெளியிட மத்திய அரசு திட்டம்
  • வரும் நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான நிதிப் பற்றாக்குறை 6.4 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது
  • காடு வளர்ப்புத் திட்டத்தில் ஈடுபடக்கூடிய விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்க மத்திய அரசு திட்டம்
  • உயர்திறன் மிக்க பாலிசிலிக்கான் உற்பத்தி செய்ய உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்திற்கு ரூ. 19500 கோடி ஒதுக்கீடு
  • புதிய மேம்படுத்தப்பட்ட வருமான வரித்தாக்கல் படிவம் அறிமுகம் செய்யப்படும்
  • கூட்டுறவு சங்கங்களுக்கான மாற்று முறை குறைந்த பட்ச வரி விகிதம் 18.5-லிருந்து 15 சதவீதமாக குறைப்பு
  • நேரடி வரி விதிப்பில் கூடுதல் மாற்றங்கள்
  • புதிய வருமான வரி படிவங்களை அடுத்த 2 மதிப்பீட்டு ஆண்டுக்கான படிவங்கள் சமர்ப்பிக்க அனுமதி
  • அனல் மின் நிலையங்களில் ஆண்டுக்கு 38 MMT கரியமில வாயுவை குறைக்க 5-7% உயிரி உருண்டைகள் இணை எரிபொருளாக பயன்படுத்தப்படும்
  • மாநில அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் செலுத்தப்படும் பங்களிப்பு 10-லிருந்து 14 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது
  • மெய்நிகர் சொத்துக்கள் பரிமாற்றத்திற்கு 30 சதவீதம் வரி விதிப்பு
  • மெய்நிகர் சொத்துக்கள் பரிமாற்றத்திற்கு ஒரு சதவீத வரி பிடித்தம் மேற்கொள்ளப்படும்
  • நீண்டகால முதலீட்டு லாபம் மீதான கூடுதல் வரி 15 சதவீதமாக நிர்ணயிக்கப்படுகிறது
  • புதிய தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் வரிச்சலுகைகள் மார்ச் 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
  • இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்திற்காக பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பட்ஜெட்டில் 68 % ஒதுக்கப்பட்டுள்ளது
  • நாட்டை நவீனப்படுத்தும் ஆற்றல் கொண்ட பசுமை எரிசக்தி & சுலபமான போக்குவரத்து முறைகள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிப்பதுடன், அனைவரையும் உள்ளடக்கும் விதத்தில் இந்திய தொழில்துறையை மாற்றக்கூடியதாகும்
  • ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை இந்தியாவில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீட்டை மேம்படுத்த உதவியுள்ளது
  • நடப்பு ஜனவரி மாதத்தில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சத்து 41 ஆயிரம் கோடியாக இருந்தது
  • மொபைல் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு இறக்குமதி தீர்வையை 7.5 சதவீதமாக குறைக்க முடிவு
  • குடைகள் மீதான வரி 20 சதவீதம் உயர்த்தப்படுகிறது, பட்டை தீட்டாத வைரத்தின் மீதான வரி 5 சதவீதமாக குறைப்பு.

பட்ஜெட் அறிக்கை:

  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/02/Budget_Speech.pdf”]

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா1 நாள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா1 நாள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்3 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா3 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.09.2026

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா3 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

Translate »
Link. grilled pork with preserved lemons​. Link.