உலகம்
ராணுவத்தில் இணைந்துள்ள பிரபல டென்னிஸ் வீரர்: ரஷ்யாவை எதிர்த்து போரிடவுள்ளதாக அறிவிப்பு!
ரஷ்யாவை எதிர்த்து போரிட பிரபல டென்னிஸ் வீரருக்கு ராணுவத்தில் சேர இருப்பதாக அறிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 4 நாட்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் மூண்டுள்ள நிலையில் ரஷ்யாவிடமிருந்து தாய் நாட்டை காப்பாற்ற அனைவரும் முன்வர வேண்டும் என உக்ரைன் அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை அடுத்து ஏராளமானோர் ராணுவத்தில் சேர்ந்து உள்ளதாகவும் அவர்களுக்கு ஆயுதங்கள் அளித்து பயிற்சி அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் உக்ரைனை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் செர்ஜி என்பவர் ரஷ்ய படையை எதிர்த்துப் போராடுவதற்காக தனது நாட்டின் ராணுவத்தில் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது தாய் நாட்டை காப்பதற்காக தனது உயிரையும் கொடுப்பேன் என உக்ரைன் டென்னிஸ் வீரர் செர்ஜி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.