சினிமா செய்திகள்
எல்லாரும் சமம்ன்னா யார் ராஜா ஆகிறது? உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ டிரைலர்

உதயநிதி நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’நெஞ்சுக்கு நீதி’ என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ஆனபின் வெளியாக இருக்கும் முதல் படம் ’நெஞ்சுக்கு நீதி’. இந்த படம் வரும் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது .
போனிகபூர் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தலித் பெண்கள் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஒரு கிராமத்தில் காவல் துறை அதிகாரியாக வரும் உதயநிதி அதிரடியாக எடுக்கும் நடவடிக்கைகள் என்ன என்பது தான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது .
உதயநிதி ஸ்டாலின், தன்யா ரவிச்சந்திரன், சுரேஷ் சக்கரவர்த்தி, மயில்சாமி, ரமேஷ் திலக், சாயாஜி ஷிண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லரில் உள்ள ஒவ்வொரு காட்சியும் அருண்ராஜா காமராஜ் டச் இருப்பது தெரிய வருகிறது. எனவே இந்த படம் ’கனா’ படம் போலவே மிகப்பெரிய வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.