தமிழ்நாடு
3 மணி நேரம் உதயநிதி படத்தைப் போட்டு கொடுமை: அண்ணாமலை அதிரடி பிரச்சாரம்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்களுக்கு அதன் கூட்டணி கட்சியினர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

#image_title
அப்போது பேசிய அவர், திமுகவினர் மக்களை பட்டி, பட்டியாக அடைத்து வைத்து திமுக கொடியை அவர்களிடம் கொடுக்கிறார்கள். அடைத்து வைத்த மக்களுக்கு 1000, 1500 ரூபாய் கொடுக்கிறார்கள். கொடி பிடித்து நடந்து சென்றால் 500 ரூபாய் கொடுக்கிறார்கள். எங்கும் இல்லாத அநியாயமாய் தென்னரசுக்கு எதிராக 30 அமைச்சர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள்.
திமுகவின் பட்டிக்கு சென்று வந்த ஒருவர் என்னிடம் சொன்னார், பட்டிக்கு சென்று வந்தது கூட பிரச்சனை இல்லை. 3 மணி நேரம் உதயநிதி படத்தைப் போட்டுவிட்டார்கள். இதைவிடக் கொடுமை இல்லை என்றார் அண்ணாமலை.
மேலும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதியை நிறைவேற்றியதைக் காட்டிலும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் ரிலீஸ் செய்த படங்களின் எண்ணிக்கை தான் அதிகம். மொத்தமாக திமுக 49 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. ஆனால் ரெட் ஜெயண்ட் கடந்த 22 மாதத்தில் 60 படங்களுக்கு மேல் ரிலீஸ் செய்திருக்கிறது என்று கடுமையாக விமர்சித்தார் அண்ணாமலை.















