தமிழ்நாடு
இது பெரியார் மண்.. பெரியார் சிலையை அகற்றிய டி.எஸ்.பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூர் பேரூராட்சியில் உள்ள உதயம் நகர் என்ற பகுதியில் திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் பேரூராட்சி அனுமதியுடன் தனது வீட்டில் பெரியார் சிலை வைத்து இருந்த நிலையில் அந்த சிலையை காவல்துறையினர் அகற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் அனுமதி இன்றி பெரியார் சிலை வைத்துள்ளதாக பாஜக நிர்வாகிகள் சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை அடுத்து தேவகோட்டை டிஎஸ்பி கணேஷ் குமார் தலைமையில் வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் அனுமதி இன்றி சிலை வைத்ததால் சட்டம் ஒழுங்கு பாதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறி பெரியார் சிலை வைத்த வீட்டின் உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

#image_title
ஆனால் பெரியார் சிலையை அகற்ற இளங்கோவன் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி அனுமதி இன்றி வைக்கப்பட்ட பெரியார் சிலையை அகற்ற காவல்துறையினர் முடிவு செய்தனர். இதனை அடுத்து வருவாய் துறை அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன் பெரியார் சிலையை சேதமின்றி அகற்றினார். அகற்றப்பட்ட பெரியார் சிலை வருவாய்த்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் அந்த பகுதி மக்கள் மற்றும் பெரியார் சிலை வைத்தவர் கோபமடைந்த நிலையில் இது குறித்து சமூக வலைதளங்களில் காட்டமான பதிவுகள் பதிவு செய்யப்பட்டன. பெரியார் சிலையை அகற்றும் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆன நிலையில் பெரியார் மண்ணில் பெரியார் சிலை அகற்றப்படுவதா? என்று ஆவேசமடைந்தனர்.
இந்த நிலையில் பெரியார் ஆதரவாளர்கள் பலர் கண்டனம் தெரிவித்த நிலையில் பெரியார் சிலையை அகற்ற அகற்றிய காரைக்குடி வட்டாட்சியர் கண்ணன் மற்றும் தேவகோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது குறித்து திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா தனது சமூக வலைதளத்தில், ‘காரைக்குடியில் பெரியார் சிலையை நிறுவ கடைபிடிக்க வேண்டிய சட்டம் விதிகளை சரியாக புரிந்து கொள்ளாமல் சலசலப்பு உண்டான சூழலில் அதிகாரிகள் இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது என்றும் பெரியார் மண் என்று பதிவு செய்துள்ளார்.
திமுக திராவிடம் மாடல் ஆட்சி என்று கூறிக்கொண்டு இருக்கும் நிலையில் இது பெரியார் மண் என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில் பெரியார் சிலையை காவல்துறையினர் அகற்றியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. பெரியார் சிலையை அகற்றிய இருவர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தாலும் பெரியார் சிலையை அகற்ற விடாமல் திமுக அரசு தடுத்திருக்க வேண்டும் என்பதே அந்த பகுதியை மக்களின் எண்ணமாக உள்ளது.