தமிழ்நாடு
சென்னை மக்கள் இனி சொத்து வரியைத் தவணை முறையில் செலுத்தலாம்.. எப்படி?

சென்னை மக்கள் இனி சொத்து வரியைத் தவணை முறையில் செலுத்தலாம்.
சென்னை கார்ப்ரேஷன், சொத்து வரியை வசூலிக்கத் தவணை முறையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் தாமதமாகச் சொத்து வரியைச் செலுத்துவது போன்றவை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சொத்து வரியைத் தவணை முறையில் செலுத்துவது எப்படி?
சொத்து வரியை ஆன்லைனில் செலுத்துவதற்கான சேவையில் (https://chennaicorporation.gov.in/gcc/online-payment/property-tax/property-tax-online-payment/), இப்போது ஹெச்.டி.எஃப்.சி வங்கி பேமெண்ட் கேட் வே சேவை தொடங்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் சொத்து வரியை மக்கள் தவணை முறையில் செலுத்தலாம்.
வட்டி எவ்வளவு?
தவணை முறையில் சொத்து வரியை செலுத்தும் போது அதற்கு ஆண்டுக்கு 2 முதல் 8.6 சதவிகிதம் வரை வட்டி வசூலிக்கப்படும்.
இது தேர்ந்தெடுக்கும் தவணை எண்ணிக்கை மற்றும் வங்கி நிறுவனங்களின் கார்டுகளை பொருத்து மாறும்.
இந்த வட்டியை குறைக்க பல்வேறு வங்கி கிரெடிட் கார்டு சேவை வழங்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.