தமிழ்நாடு
நாடாளுமன்றத்தில் பிபிசி ஆவணப்படம் குறித்து விவாதிக்க வேண்டும்.. முதல்வர் ஸ்டாலின்!

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் முடிந்து பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய பிரச்சனைகள் குறித்த முக்கிய கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக எம்பிக்கள் குழு இன்று விவாதித்தது.
அதில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானங்கள் குறித்து இங்கு விளக்காகப் பார்க்கலாம்.
குஜராத் கலவரம் தொடர்பாக பிபிஎஸ் வெளியிட்டுள்ள ஆவணப் படம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.
நீட் தேர்வு விலக்கு மசோதா பற்றி நாடாளுமன்றத்தில் திமுக எம்பிகள் குரல் எழுப்ப வேண்டும்.
சிறுபான்மையின மாணவர்களுக்கான மெட்ரிக் கல்வி உதவித்தொகையை நிறுத்தியதைக் குறித்து விவாதிக்க வேண்டும்.
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டும்.
மதுரை ஏய்ம்ஸ், மீனவர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும்.
அதானி குழுமத்தால் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து விவாதிக்க வேண்டும்.
மத்திய அரசுக்குத் தமிழ்நாடு அரசு வைத்துள்ள கோரிக்கைகள், கடிதங்கள் குறித்தும் விவாதிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.