இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை 09.12.2025

- இந்திய அரிசிக்கு புதிய வரி விதிப்பு – டொனால்ட் டிரம்ப்
- கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
- நாடாளுமன்றத்தில் இன்று எஸ்.ஐ.ஆர். குறித்து 10 மணி நேரம் விவாதம் நடைபெற உள்ளது.
- ஜப்பான் மிசாவா நகரத்தில் இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவு. சுனாமி எச்சரிக்கை.
- இந்தியா தென்ஆப்பிரிக்கா முதல் டி 20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
- ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.40 குறைந்து கிராம் ரூ.12000க்கும் சவவரன் ரூ.96000க்கும் விற்பனையாகிறது.
- ஐபிஎல் ஏலம் அப்டேட். டிசம்பர் 16ல் அபுதாபியில் நடைபெறுகிறது. 1355 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். 350 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
- புதுச்சேரி தவெக கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த வாலிபர் கைது.
- நான் என்ன செய்ய வேண்டும் என சொல்லாதீர்கள் – புஸ்ஸி ஆனந்திடம் கர்ஜித்த எஸ்.பி. பாஸ் இல்லாதவர்களை உள்ளே அனுமதிப்பதில் பிரச்னை.
- பல தேர்தல்களில் தோல்வி. ரூ.1.கோடி கொடுத்து இபிஎஸ் 5 ஆயிரம் பேரை கூட்டினார்.-செங்கோட்டையன் பேச்சு.
- கடந்த 5 நிதியாண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் சுமார் ரூ.6.15 லட்சம் கோடி வாராக்கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சகம் தகவல்.
- காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு இன்று பிறந்தநாள். – தலைவர்கள் வாழ்த்து.
- சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்வதற்கான இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீசை இந்தியா கூட்டணியினர் இன்று சபாநாயகரிடம் வழங்க உள்ளனர்.
- 32000 பள்ளி ஆசிரியர்கள் நியமனங்கள் ரத்து செல்லாது. – ஐகோர்ட் உத்தரவால் மேற்கு வங்க அரசு நிம்மதி.
- புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். ரேஷன் கடைகள் அமைக்க வேண்டும் – விஜய் பேச்சு.
- மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை நேரடியாக துல்லியமான முறையில் தொடர்ந்து கண்காணிக்கும் விதமாக“Temple” என்ற சிறப்பு தொழில்நுட்ப சாதனத்தை விரைவில் அறிமுகம் செய்து Deep Tech துறையில் கால் பதிக்க உள்ளது “ZOMATO“.












