தமிழ்நாடு
பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை: எத்தனை மாவட்டங்களுக்கு?

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் மொத்தம் 38 மாவட்டங்கள் இருக்கும் நிலையில் அதில் 24 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், தருமபுரி, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை.
மேலும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்பட பல கல்லூரிகளிலும் பல்கலைக் கழகத்திலும் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதேபோல் அரசு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தை போலவே புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுவை கல்வித்துறை அமைச்சர் நமசிவாயம் அவர்கள் கூறியபோது புதுவையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை என அறிவித்துள்ளார்.

















