Connect with us

தினபலன்

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (19/10/2020)

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil

19-10-2020 

திங்கட்கிழமை

 

மேஷம்

கிரகநிலை:

ராசியில்  சூர்யன், புதன் – குடும்ப ஸ்தானத்தில்  சுக்ரன் –  தைரிய ஸ்தானத்தில் ராஹூ –  பாக்கிய ஸ்தானத்தில் கேது, சனி –  தொழில் ஸ்தானத்தில் செவ்வாய்,   குரு (அதி. சா) -லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  

 

இன்று இரவு 2.31 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று உத்தியோகத்தில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. சக ஊழியர்களுடன் நிதானமாக பேசி பழகுவது நன்மை தரும். புத்தி கூர்மையுடன் செயல்பட்டு எந்த சிக்கலையும் தீர்க்கும் ஆற்றல் அதிகரிக்கும். எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வது நல்லது. 

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

 

ரிஷபம்

கிரகநிலை:

ராசியில்  சுக்ரன் – குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ –  அஷ்டம ஸ்தானத்தில் கேது, சனி  – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய்,   குரு (அதி. சா)  – தொழில்  ஸ்தானத்தில் சந்திரன் – விரைய ஸ்தானத்தில்   சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

 

இன்று இரவு 2.31 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று முக்கிய நபர்களின் உதவிகள் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விறுவிறுப்படையும். கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை மாறும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

 

மிதுனம்

கிரகநிலை:

ராசியில்  ராஹூ –  களத்திர ஸ்தானத்தில் கேது, சனி – அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு (அதி. சா) –  பாக்கிய  ஸ்தானத்தில் சந்திரன் – லாப  ஸ்தானத்தில்   சூர்யன், புதன் – அயன, சயன, போக ஸ்தானத்தில்  சுக்ரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

 

இன்று இரவு 2.31 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடந்து கொள்வது நல்லது. பணவரத்து திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். கூடவே மனதில் ஒருவித கவலையும் இருந்து வரும். 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

 

கடகம்

கிரகநிலை:

ரண, ருண ஸ்தானத்தில்  கேது, சனி –  களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு (அதி. சா)  – அஷ்டம  ஸ்தானத்தில் சந்திரன் – தொழில்  ஸ்தானத்தில்   சூர்யன், புதன் – லாப ஸ்தானத்தில்  சுக்ரன் –  அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

 

இன்று இரவு 2.31 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று வாழ்க்கை துணையுடன் எதையும் பேசி தீர ஆலோசித்து செய்வது நன்மை தரும். பிள்ளைகள் அன்பு செலுத்துவார்கள். ஆனால் அவர்களுக்காக செலவு செய்ய நேரிடும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். சுறுசுறுப்பு காணப்படும். 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

 

சிம்மம்

கிரகநிலை:

பஞ்சம ஸ்தானத்தில்  கேது, சனி –  ரண, ருண ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு (அதி. சா) –  களத்திர  ஸ்தானத்தில் சந்திரன் – பாக்கிய  ஸ்தானத்தில்   சூர்யன், புதன் – தொழில் ஸ்தானத்தில்  சுக்ரன்  –  லாப ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

 

இன்று இரவு 2.31 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று அடுத்தவரை அனுசரித்து செல்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். எதிர்பாராத சில சம்பவங்கள் நடக்கலாம். அதனால் உங்களுக்கு நன்மையும் உண்டாகலாம். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். 

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 5

 

கன்னி

கிரகநிலை:

சுக  ஸ்தானத்தில்  கேது, சனி – பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு (அதி. சா) –  ரண ருண ரோக  ஸ்தானத்தில் சந்திரன் – அஷ்டம  ஸ்தானத்தில்   சூர்யன், புதன் – பாக்கிய  ஸ்தானத்தில் சுக்ரன் –  தொழில்  ஸ்தானத்தில்  ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன. 

 

இன்று இரவு 2.31 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததை விட சற்று நிதானமாகவே நடக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்ற நிலை காண்பார்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6

 

துலாம்

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் கேது, சனி – சுக  ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு (அதி. சா) – பஞ்சம  ஸ்தானத்தில் சந்திரன் –  களத்திர  ஸ்தானத்தில்   சூர்யன், புதன் – அஷ்டம  ஸ்தானத்தில்  சுக்ரன் –  பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.  

 

இன்று இரவு 2.31 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் நிதான மாக செயல்படுவதும் மற்றவர்களை அனுசரித்து போவதும் நல்லது. குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து போவார்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய நேரிடும். 

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

 

விருச்சிகம்

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் கேது, சனி  –   தைரிய ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு (அதி. சா) – சுக ஸ்தானத்தில் சந்திரன் – ரண ருண ரோக  ஸ்தானத்தில்   சூர்யன், புதன்  – களத்திர ஸ்தானத்தில்   சுக்ரன் –  அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு  என கிரகங்கள் வலம் வருகின்றன.

 

இன்று இரவு 2.31 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று வழக்குகளில் நிதான போக்கு காணப்படும். எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் நன்மை உண்டாகும். மன குழப்பம் நீங்கும். அலுவலகத்தில் ஆவணங்கள் தொடர்பான சந்தேகங்கள் உண்டாகலாம். உடனுக்குடன் அவற்றை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9

 

தனுசு

கிரகநிலை:

ராசியில்  கேது, சனி – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு (அதி. சா) – தைரிய ஸ்தானத்தில் சந்திரன் –  பஞ்சம  ஸ்தானத்தில்   சூர்யன், புதன் –  ரண, ருண  ஸ்தானத்தில்  சுக்ரன் – களத்திர ஸ்தானத்தில்  ராஹு  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

 

இன்று இரவு 2.31 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று எடுத்த காரியத்தை சோர்வடையாமல் தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடச் செய்யும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் விலகும். பயணம் மூலம் லாபம் கிடைக்க கூடும். புதிய நபர்கள் நட்பு கிடைக்கும். 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

 

மகரம்

கிரகநிலை:

ராசியில் செவ்வாய்,  குரு (அதி. சா) – தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் சந்திரன் –  சுக  ஸ்தானத்தில்   சூர்யன், புதன் – பஞ்சம  ஸ்தானத்தில்  சுக்ரன் –  ரண, ருண  ஸ்தானத்தில்  ராஹூ  –  அயன, சயன,  போக ஸ்தானத்தில் கேது, சனி  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

 

இன்று இரவு 2.31 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பேச்சின் இனிமை புத்திசாலித்தனம் இவற்றால் முன்னேற்றம் பெறுவார்கள். சிலருக்கு புதிய ஆர்டர்களும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பேச்சினால் மேல் அதிகாரிகளை கவர்ந்து விடுவார்கள். 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்:  4, 6

 

கும்பம்

கிரகநிலை:

ராசியில்  சந்திரன் – தைரிய  ஸ்தானத்தில்   சூர்யன், புதன் – சுக  ஸ்தானத்தில்  சுக்ரன் –  பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ  –  லாப ஸ்தானத்தில் கேது, சனி – அயன, சயன, போக ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு (அதி. சா)  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

 

இன்று இரவு 2.31 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று எதிர்பார்த்த உதவியும் நன்மைகள் நடக்கும். ஆனால் பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சியடையும் விதமாக சம்பவங்கள் நடக்கலாம். உறவினர் மூலம் தேவையான உதவியும் கிடைக்கும். 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

 

மீனம்

கிரகநிலை:

தன  ஸ்தானத்தில்   சூர்யன், புதன்  –  தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் –  சுக ஸ்தானத்தில்  ராஹூ –  தொழில்  ஸ்தானத்தில் கேது, சனி – லாப ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு (அதி. சா) – விரைய ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

 

இன்று இரவு 2.31 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வழக்குகளை தள்ளிப்போடுவது நல்லது. எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை உண்டாகும். ஆனால் குடும்ப விஷயங்களை கூறாமல் தவிர்ப்பது நல்லது.`

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா9 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா15 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized2 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

Translate »
This is a test submission for email notification..