வணிகம்
தங்கம் விலை தொடர் சரிவு: இன்றைய சென்னை நிலவரம்

தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 18ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 144ம் குறைந்துள்ளது நகை பிரியர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தைப் பார்ப்போம்
சென்னையில் இன்று ஒரே நாளில் 18 ரூபாய் குறைந்து ரூபாய் 4,535 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் இன்று ஒரே நாளில் 144 உயர்ந்து குறைந்து 36,280 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4,923 எனவும் ஒரு சவரன் ரூபாய் 39,384 எனவும் விற்பனையாகி வருகிறது. ஆபரண தங்கம் போலவே சுத்த தங்கமும் ஒரு கிராம் ரூபாய் 18ம், ஒரு சவரன் ரூபாய் 144ம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் தங்கத்தின் விலை போலவே வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளியின் விலை இன்று கிராம் ஒன்றுக்கு 70 காசுகள் குறைந்து ரூபாய் 65.40 என விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 65,400 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.













