செய்திகள்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மே 6 முதல் தொடக்கம்! விண்ணப்பிக்க கடைசி நாள் மே 25!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2025-ம் ஆண்டிற்கான குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட மொத்தம் 3,935 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வு ஜூலை 12ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் மே 25 ஆகும்.
இந்த தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் நபர்களுக்காக, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் மே 6ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பன் அறிவித்துள்ளார்.
🔹 இலவச பயிற்சி வகுப்புகளின் சிறப்பம்சங்கள்:
சிறந்த பயிற்றுநர்களால் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் வகுப்புகள்
ஸ்மார்ட் போர்டு வசதி
இலவச Wi-Fi
நூலக வசதி மற்றும் போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள்
வாரந்தோறும் தேர்வுகள், மாதிரி தேர்வுகள்
பாடக்குறிப்புகள் இலவசமாக பதிவிறக்கம் செய்யும் வசதி
இப்பயிற்சியில் பங்கேற்க விரும்பும் பொதுப் பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளி நபர்கள், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2 கொண்டு மே 6 அன்று நேரில் சென்று பதிவு செய்யலாம்.
🔹 மேலதிக தகவல்களுக்கு:
தொலைபேசி: 0422-2642388, 9499055937
முகவரி: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டம்பாளையம்
இணையதளங்கள்:
Telegram: https://t.me/cbedecgc
தேர்வு அறிவிப்பு: https://www.tnpsc.gov.in








