Connect with us

செய்திகள்

TNPSC தேர்வர்கள் பணி நியமன ஆணை பெறும் நாள் வந்துவிட்டது! முதலமைச்சர் ஸ்டாலின் வழங்க உள்ளார்!

Published

on

TNPSC தேர்வர்கள் பணி நியமன ஆணை பெற உள்ளனர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (02 மே 2025) நடைபெறுகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று நேரடியாக நியமன ஆணைகளை வழங்க உள்ளார்.

2025-26 நிதிநிலை அறிக்கையில், அரசு துறைகளில் காலியாக உள்ள 40,000 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, தற்போது TNPSC மூலம் தேர்வான 151 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளது.

மேலும், 2025 ஆம் ஆண்டுக்கான நம்மாழ்வார் விருது மற்றும் உயிர்மை வேளாண்மையில் சிறந்த நிலை பெற்ற மூன்று விவசாயிகளுக்கும் விருதுகள் வழங்கப்படும். இந்த விருதுகளைவும் முதல்வர் வழங்க உள்ளார்.

Translate »
Your first backlinks will appear within minutes — and your website gets cited on other sites at the same time..