இந்தியா
தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்றனர்.

தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் 4 பேர் இன்று மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர்.
திமுகவின் திரு.பி.வில்சன் வழக்கறிஞர், கவிஞர் சல்மா மற்றும் திரு.எஸ.ஆர்.சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்ய தலைவர் திரு.கமலகாசன் ஆகியோர் இன்று தங்களது பொறுப்புக்களை ஏற்றக் கொண்டனர்.
பதவியேற்ற நால்வருக்கும் தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
பதவியேற்ற நால்வரும் தமிழிலேயே உறுதிமொழி ஏற்று பதவியேற்றனர்.














