சினிமா செய்திகள்
தமிழகத்தில் இன்று முதல் திறக்கப்பட்ட திரை அரங்குகள்.. என்ன படங்கள் எல்லாம் பார்க்கலாம்!

கோவிட்-19 ஊரடங்கிற்குப் பிறகு நவம்பர் 10-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள திரை அரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.
திரை அரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இடையில் விபிஎப் கட்டணத்தில் யார் செலுத்துவது என்ற பிரச்சனை உள்ளதால், திரை அரங்குகள் திறக்கப்பட்டும் புதிய திரைப்படங்கள் ஏதும் வெளியாகவில்லை.
தீபாவளிக்காவது புதிய திரைப்படங்கள் திரைக்கு வரும் என்று பார்த்தால், 4-க்கும் மேற்பட்ட தமிழ் படங்கள் ஓடிடி தளங்களிலும், நேரடியாகத் தொலைக்காட்சிகளிலும் வெளியாகின்றன.
எனவே இன்று முதல் திரை திரை அரங்குகள் திறக்கப்பட்டாலும், ஏற்கனவே திரை அரங்குகளில் வெளியான படங்களே மீண்டும் திரையிடப்பட்டுள்ளன.
துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தாள், அஷோக் செல்வனின் ஓ மை கடவுளே, அடல்ட் படமான இருட்டு அறையில் முரட்டு குத்து, ஹரிஷ் கல்யாணின் தாராள பிரபு, சென்னை ஏஜிஎஸ் திரை அரங்குகளில் பிகில் மற்றும் பிரேக் தி சைலன்ஸ் என்ற கொரிய படம் உட்பட பல்வேறு படங்கள் திரையிடப்பட்டு வருகிறன.
இவற்றில் பல படங்கள் ஏற்கான்வே தொலைக்காட்சிகளில் வெளியானவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேலைத் திரை அரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கங்கள் இடையில் தீர்வு காணப்பட்டால், தீபாவளிக்கு இந்த வார இறுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாக வாய்ப்புகள் உள்ளன.














