சினிமா செய்திகள்
தீபாவளிக்கு திரையரங்கத்தில் ரிலீஸ் ஆகும் 4 படங்கள்!

தீபாவளிக்கு 4 தமிழ் படங்கள் திரைக்க வர உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
கோரோனா ஊரடங்கிற்குப் பிறகு நவம்பர் 10-ம் தேதி முதல் திரை அரங்குகள் திறந்துள்ளன. விபிஎப் கட்டணம் பிரச்சனையால் புதிய படங்கள் ஏதும் 10-ம் தேதி வெளியாகவில்லை.
இந்த வாரம் இறுதியில் தீபாவளி திருநாள் என்பதால், புதிய படங்கள் வெளியாகுமா என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த சூழலில் ஏன் பிரச்சனையை நீட்டிக்க வேண்டும் என்று முடிவு எடுத்த விபிஎப் நிறுவனங்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள், அடுத்த இரண்டு வாரங்களுக்குத் தயாரிப்பாளர்கள் விபிஎப் கட்டணத்தைச் செலுத்தத் தேவையில்லை என்று கூறியுள்ளன.
எனவே தீபாவளிக்கு சந்தானம் நடிப்பில் பிஸ்கோத், ஜீவா – அருள்நிதி நடிப்பில் களத்தில் சந்திப்போம், தட்றோம் தூக்றோம், இரண்டாம் குத்து படங்கள் வெளியாக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா காலம் என்பதால் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே திரை அரங்குகளில் படம் பார்க்க முடியும். புதிய படங்களுக்குத் திரை அரங்குகளில் ஆதரவு எப்படி இருக்கப் போகிறது என்று இந்த வாரம் தெரிந்துவிடும்.
விஜய் நடிப்பில் மாஸ்டர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி வந்தாலும், கோரோனாவிற்கு பிறகு ரசிகர்களின் ஆதரவு எப்படி இருக்கும் என்ற அச்சத்தில் ரிலீஸ் செய்யாமல் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் பெரிய நடிகர்கள் படம் என்றால் திரை அரங்குகளில் கூட்டம் அதிகம் சேரும், கொரோனா பரவும் அச்சம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.



















