Connect with us

இந்தியா

மீண்டும் பராசக்தி! – ஆனால் தமிழ்நாட்டின் வரலற்றைச் சரியாகச் சொல்லுமா? எகிறும் எதிர்பார்ப்பு…

Published

on

சுதா கொங்கரா இயக்கத்தில் டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் தமிழ்த் திரைப்படம் பராசக்தி  தமிழ்நாட்டு மக்களிடையேயும் தமிழ்நாட்டு அரசியல் ஆர்வலர்களிடையேயும் தமிழ் திரைப்பட ரசிகர்களிடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது.

1952ல் கலைஞர் கதைவசனத்தில் வெளிவந்த பராசக்தி திரைப்படமே முதன் முதலில் வெளியான சமூகத் திரைப்படம். அதுவரை வெறும் புராணப் படங்களை மட்டுமே பார்த்து வந்த சினிமா ரசிகர்கள் முதன்முதலில் தங்களுக்கே அருகே நடக்கும் சமூக அவலங்களைத் தோலுரித்துக் காட்டிய திரைப்படமாக பராசக்தி திரைப்படத்தை பார்த்து மிகுந்த வரவேற்பு அளித்தனர்.

சமீப காலங்களாக திரைப்டங்களுக்கு புதிய பெயர்கள் வைப்பதில் மிகுந்த பஞ்சம் ஏற்பட்டு ஏற்கனவே வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படங்களின் பெயர்களையே வைக்கும் பழக்கம் உருவாகிவிட்டது. அந்த வகையில் சுதா கொங்கரா இயக்கத்தில் டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் தமிழ்த் திரைப்படம் பராசக்தி .

இந்த திரைப்படத்தின் கதைக்களம் ஒரு அரசியல் வரலாற்றுக் களமாக அமைந்துள்ளது. அதாவது 1965ல் அப்போதைய ஒன்றிய அரசு கொண்டு வந்த இந்தி மொழித் திணிப்பு என்ற எதேச்சாதிகாரத்தை எதிர்த்து தமிழ்நாட்டு இளைஞர்கள் வீறுகொண்டு நடத்திய  இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது இந்திய அளவில் மட்டுமல்ல.. உலக அளவில் உற்றுப்  பார்க்கப்பட்டது. அப்போராட்டத்தில் பல தமிழ் இளைஞர்கள் தங்களது தாய்மொழி தமிழுக்காக தீக்குளித்து தங்களது உயிரை மாய்த்துக் கொண்டு ஒன்றிய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்ததன் விளைவாக தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் விரும்பும் வரை தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆங்கிலம் தொடா்பு மொழ்யாக அலுவல் மொழியாக நீடித்து இருக்கும் என்று சிறப்பு சட்டத்திருத்தம் செய்து தனது இந்தித் திணிப்பினை அப்போதைய அரசு திரும்பப் பெற்றது.

அந்த வீரஞ்செறிந்த வரலாறு சிதையாமல் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து இந்த திரைப்படம் அமைய வேண்டும் என்பதே ஒட்டுதொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
Biolinker.me – One-Page Sites, No Coding Carrd for free..