Connect with us

செய்திகள்

தமிழக பெண்களுக்கு ரூ.1000 யாருக்கெல்லாம் உரிமைத்தொகை கிடைக்கும்? கிடைக்காது?

Published

on

உரிமைத்தொகை

repee

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு திமுக ஆட்சியின் சார்பில் ரூபாய் 1000 வழங்கப்படும். மேலும், இந்தத் திட்டத்திற்காக ரூபாய் 7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நெறிமுறைகள்

repee

ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை பெறுவதற்கு 21 வயது நிரம்பிய பெண்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்த ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும். குடும்பங்களின் ஆண்டு வருமானம் இரண்டரை லட்சத்திற்குக் கீழ் இருக்க வேண்டும்.

இவர்களுக்கு உரிமைத்தொகை கிடைக்காது…

நான்கு சக்கர வாகனம் வைத்துள்ளவர்கள் மற்றும் ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை செய்து வரும் நிறுவன உரிமையாளர்கள், முதியோர், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் ஓய்வூதியம் பெறுவர்களுககு ரூ.1000 கிடையாது. அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், வங்கி, வாரியங்கள் உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள், கூட்டுறவு ஊழியர்களுக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற ஊழியர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ரூ.1000 கிடையாது. மேலும், குடும்பங்களின் ஆண்டு வருமானம் இரண்டரை லட்சத்திற்குக் கீழ் இருக்க வேண்டும். ஆனால், மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெறும் குடும்பத் தலைவிகள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 12 ஆதாரங்கள் கட்டாயம்

குடும்பத் தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன் பெற, ஒரு குடும்பத்தில் 21 வயது நிரம்பிய பெண் விண்ணப்பிக்கலாம். அதாவது செப்டம்பர் 15, 2002 தேதிக்கு முன் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கடைகளில் நடத்தப்படும் முகாம்களில் விண்ணப்பிக்கும் போது, என்னென்ன ஆதாரங்கள் கொடுக்க வேண்டும்.

1) குடும்ப அட்டை எண்
2) ஆதார் எண்
3) தொலைப்பேசி எண்
4) புகைப்படம்
5) வயது
6) மாவட்டம்
7) தொழில்
8) வாடகை வீடா? சொந்த வீடா?
9) நிலம் வைத்திருப்பவரா?
10) வாகனம் வைத்து உள்ளவரா
11) வங்கிக் கணக்கு
12) உறுதிமொழி

பொது விநியோக நியாய விலை கடைகள் ஒரு கணக்கெடுப்பு அலகாக எடுத்துக் கொள்ளப்படும்.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?