பிற விளையாட்டுகள்
தமிழ்நாடு கால்பந்து ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்.. அரசு கேபிள் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

அரசு கேபிள் நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு கால்பந்து ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்துள்ளது.
தற்போது கத்தாரில் நடைபெற்று உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஸ்பொர்ட்ஸ்18 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சேனலை கேபிள் டிவி அல்லது பிற டிடிஎச் சேவைகள் மூலம் பார்க்க 8 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
இந்நிலையில் அரசு கேபிள் இணைப்பு வைத்துள்ளவர்கள் எந்த ஒரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் ஸ்போர்ட்ஸ்18 சேனலை, தற்போது தாங்கள் உள்ள திட்டத்திலேயே இலவசமாகப் பார்க்கலாம் என தெரிவித்துள்ளனர்.
இதனை தமிழ்நாடு தகவல் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது டிவிட்டர் பதிவு மூலம் தெரிவித்துள்ளார்.
அரசு கேபிள் இணைப்பு உள்ளவர்கள் சேனல் என் 229-ல் ஸ்போர்ட்ஸ் 18 சேனலை பார்க்கலாம்.
இந்த அறிவிப்பு தமிழ்நாடு கால்பந்து ரசிகர்களைக் குத்தாட்டம் போட்டு கொண்டாட வைத்துள்ளது.