பிற விளையாட்டுகள்
உலகக்கோப்பை கால்பந்து போட்டி: நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அதிர்ச்சி தோல்வி..!

கடந்த சில நாட்களாக உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த 4 போட்டிகளில் ஒன்றான பிரான்ஸ் மற்றும் துனிசியா நாடுகள் இடையே நடந்த போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது.
இந்த நிலையில் நேற்றும் இன்றும் நடைபெற்ற போட்டிகளில் விபரங்களை தற்போது பார்ப்போம். நேற்று நடைபெற்ற அமெரிக்கா மற்றும் ஈரான் அணிகளுக்கிடையிலான போட்டியில் அமெரிக்கா 1-0 என்ற கோல் கணக்கில் ஈரான் அணியை வென்றது. அதேபோல் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் அணிகளுக்கிடையிலான நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 3 போல் போட்டு அபார வெற்றி பெற்றது.
மேலும் நேற்று நடைபெற்ற பிரான்ஸ் மற்றும் துனிஷியா அணிகளுக்கிடையிலான போட்டியில் துனிஷியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியை வீழ்த்தியது. அதேபோல் ஆஸ்திரேலியா மற்றும் டென்மார்க் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தியது
மேலும் இன்று காலை அர்ஜென்டினா மற்றும் போலந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினா போலந்து அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அதேபோல் மெக்சிகோ அணி சவுதி அரேபிய அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று குரோஷியா-பெல்ஜியம் மற்றும் கனடா-மொரோக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.