சினிமா செய்திகள்
’சூர்யா 39’ படத்தின் இதுதான்: அதிரடி அறிவிப்பு!

நடிகர் சூர்யா நடித்து வரும் 40வது திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக், மூன்றாவது லுக் போஸ்டர்கள் வெளியாகி வந்தன என்பதும் அவற்றை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதையும் பார்த்தோம்
இந்த நிலையில் சற்று முன்னர் சூர்யா நடித்து வரும் 39-வது படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ’ஜெய்பீம்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
தா.செ.ஞானவேல் என்பவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் சூர்யா, பிரகாஷ்ராஜ், ரஜிஷாவிஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தில் சூர்யா ஒரு வழக்கறிஞர் கேரக்டரில் நடித்து இருப்பதாக போல் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் இருந்து தெரிய வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.
Excited to share the First Look of #JaiBhim #ஜெய்பீம்@prakashraaj @tjgnan @RSeanRoland @srkathiir @KKadhirr_artdir @philoedit @anbariv @rajisha_vijayan #Manikandan #LijoMolJose @joshikamaya @PoornimaRamasw1 @thanga18 @kabilanchelliah @proyuvraaj @rajsekarpandian @2D_ENTPVTLTD pic.twitter.com/acDoYuir2K
— Suriya Sivakumar (@Suriya_offl) July 23, 2021













