சினிமா செய்திகள்
ஹீரோவாகும் சூரி… டைரக்டர் யாரு தெரியுமா?

காமெடியனாக நடித்து வந்த சூரி முதன்முதலில் ஒரு படத்தில் நாயகனாக கமீட் ஆகியுள்ளார். அதுவும் இயக்குநர் வெற்றிமாறன் தான் அவரை இயக்க உள்ளார்.
வடசென்னை படத்தை மிகவும் நம்பியிருந்த வெற்றிமாறனுக்கு கிடைத்த மிகப்பெரிய ஏமாற்றம், அவரை அப்செட் செய்தது. மீண்டும் எப்படியோ ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என எண்ணிய அவர், தனுஷுடன் இணைந்து அசுரன் படத்தை இயக்கி வருகிறார்.
அசுரன் படத்தை முடித்த பிறகாவாது வடசென்னை 2 எடுப்பாரா என்று பார்த்தால், இப்போதைக்கு அந்த முடிவை தள்ளி வைத்துள்ளார் என்றே தெரிகிறது.
அடுத்து அவர் காமெடி நடிகர் சூரியை நாயகனாக வைத்து படமெடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. விரைவில் இந்த புதிய கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் சூரிக்கு இது நிச்சயம் கேரியர் சேஞ்ச் படமாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.






















