இந்தியா
எல்.ஐ.சி ஐபிஓவுக்கு சுப்ரீம் கோர்ட் தடையா? பரபரப்பு தகவல்!

எல்.ஐ.சி ஐபிஓ விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகள் தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
எல்.ஐ.சி ஐபிஓ பங்குகளை விற்பனை செய்யும் வகையில் புதிய சட்டத்தை நிறைவேற்றி, சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தங்களுக்கு எதிர்த்து தெரிவித்ஹ்டு தமிழகத்தை சார்ந்த தாமஸ் ,ராகவேந்திர ராவ் உள்ளிட்ட 15 பேரும் சென்னையைச் சேர்ந்த ஒருசிலரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எல்.ஐ.சி பணம் பாலிசிதாரர்களின் பணம் என்றும், இதை ஐபிஓ மூலம் விற்பனை செய்வது சொத்துரிமை சட்டத்தை மீறுவது போல் என்றும், எனவே எல்.ஐ.சி ஐபிஓவுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதிட்டார்
எல்.ஐ.சி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் இந்த விவகாரத்தை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்றும், எல்.ஐ.சி ஐபிஓவை லட்சக்கணக்கானோர் வாங்க முன்வந்துள்ள நிலையில் இந்த வழக்கு பங்குச்சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்றும் எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டனர்.
இந்த நிலையில் நிதி சட்டத்தில் திருத்தங்களை எதிர்த்து வழக்கு தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசு மற்றும் எல்.ஐ.சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், எல்.ஐ.சி ஐபிஓவுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க எவ்வித முகாந்திரமும் இல்லை என தெரிவித்தனர். மேலும் இந்த மனுவை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளனர்