தமிழ்நாடு
சேலம் 8 வழிச் சாலை: நிலம் கையகப்படுத்த சென்னை ஹைகோர்ட் தடை!
கோவை: சேலம் – சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு நிலம் எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சேலம் – சென்னை 8 வழி சாலை அமைக்கப்பட வேலைகள் நடந்து வருகிறது. இந்த சாலை போடப்படும் என்று அறிவிப்பு வெளியானதில் இருந்தே மக்கள் இதற்கு எதிராக போராடி வருகிறார்கள்.
இந்த சாலைக்கு எதிராக போராடும் மக்கள் கைதும் செய்யப்படுகிறார்கள். இதற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பாக தொடரப்பட்ட வழக்கில் இன்று விசாரணை நடந்தது. அதில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
அதன்படி சேலம் – சென்னை எட்டு வழிச் சாலைக்கு நிலம் எடுக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. மறுஉத்தரவு வரும் வரை நிலத்தை கையகப்படுத்த கூடாது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. வழக்கு விசாரணையை செப்டம்பர் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்து இருக்கிறார்கள்.