Connect with us

விமர்சனம்

ஏர் ஓட்டுபவர்களை விமானத்தில் அழைத்துச் சென்றாரா சூர்யா.. சூரரைப் போற்று – விமர்சனம்!

Published

on

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள ஒரு பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்தவர் நெடுமாறன் ராஜாங்கம். அப்பா ஆசிரியர். அம்மா ஊர்வசி. தங்களது கிராமத்துக்கு பெட்டிஷன் எழுதி மின்சாரம் வர வைக்கிறார் சூர்யாவின் அப்பா. அடுத்ததாக எப்படியாவது சோழவந்தானில் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்த வேண்டும் என்று பல முறை பெட்டிஷன் எழுதுகிறார். ஆனால் தோல்வியே மிச்சம்.

இளைஞரான நெடுமாறன், கிராம மக்களை கூட்டிச்சென்று ரயிலை நிறுத்தக் கோரி போராட்டம் நடத்துகிறார். அதில் அவரது நண்பர் காளி வெங்கட்டுக்கு அடிபடுகிறது. சூர்யா தான் அதற்குக் காரணம் என்று அவரது அப்பா கோபப்படுகிறார்.

ஊரிலிருந்தால் அப்பாவுடன் எப்போது பிரச்சனை என்று அரசு வேலைக்கு விண்ணப்பிக்கிறார். விமானப் படையில் வேலை கிடைக்கிறது. ஆனாலும் அப்பாவுடன் சரியான பேச்சுவார்த்தை இல்லை. சில வருடங்களில் அவரது அப்பா சூர்யாவின் நினைப்பாகவே இருந்து இறந்துவிடுகிறார். தந்தையின் இறுதி ஊர்வலத்திற்குச் சரியான நேரத்திற்கு வர முடியவில்லை. காரணம் விமான டிக்கெட் கட்டணம்.

தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முடியாத போன துக்கத்தில் வீட்டிற்கு வரும் சூர்யாவைப் பார்த்து அவரது அம்மா சொல்லும் வசனங்கள் வெளியூர்களில், வெளிநாடுகளில் பணத்திற்காக வேலைக்குச் செல்வோர் படும் கஷ்டம். அடுத்த ஒரு வருடத்தில் ஏர் ஓட்டுப்பவனும் ஏரோ பிளேனில் செல்ல வேண்டும் என்ற கனவோடு வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊருக்கு வருகிறார்.

இவரது விமான நிறுவன கனவிற்குக் கடன் வழங்க வங்கிகள் மறுக்கின்றன. இப்படியே காலம் செல்ல கட்டினால் இவரைத்தான் கடிப்பேன் என்று அபர்ணா பாலமுரளி மாப்பிள்ளை பார்க்க வருகிறார். இருவருக்கும் பிடித்து இருந்தாலும் அபர்ணாவுக்கு உள்ள பேக்கரி கனவு, சூர்யாவின் விமான நிறுவன கனவும் இரண்டும் அவர்கள் திருமண கனவிற்குத் தடையாக உள்ளன.

ஆனால் ஊரில் சின்னதாக பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார் அப்பர்ணா. இவருக்கு உதவியாக அவரது சித்தப்பா கருணாஸ் இருக்கிறார். மறுபக்கம் சூர்யா தனது கனவு விமான நிறுவனத்தைத் தொடங்க பிரபல தொழில் அதிபரிடம் உதவி கேட்கிறார். அவர் உதாசினப்படுத்தினர். அப்போது முதலீட்டு நிறுவனர் ஒருவர் சூர்யாவுக்கு உதவ வருகிறார். அவர்களுக்குத் தனது நிறுவனத்தின் திட்டம் பற்றி விளக்குகிறார். 1000 ரூபாய் என்ன 1 ரூபாய்க்குக் கூட விமானத்தை இயக்கி லாபம் பார்க்க முடியும் என்கிறார். முதலீட்டு நிறுவனம் நிதி உதவி வழங்க ஒப்புக்கொள்கிறது. எப்படியும் விமான நிறுவனம் தொடங்கிவிடுவோம் என்ற கனவில் அபர்ணாவைத் திருமணம் செய்துகொள்கிறார்.

விமான நிறுவனத்தைத் தொடங்குவதற்கான அனுமதிகள் பெறும் முன்பு விமானம் ஒன்றை புக் செய்யுங்கள், நாங்கள் சில மாதங்களில் நிதி உதவி அளிக்கிறோம் என்று கூறுகின்றனர். அதை நம்பி வீட்டை அடைமானம் வைத்து கடன் வாங்கி விமானம் ஒன்றை புக் செய்கிறார் சூர்யா. ஆனால் நிதி வழங்க ஒப்புக்கொண்ட விமான நிறுவனம் சூர்யாவை ஏமாற்றுகிறது.

என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடும் சூர்யாவுக்கு பக்கபலமாக அவரது மனைவி இருக்கிறார். அப்போது சூர்யாவுக்கு நாம் ஏன் சிறிய விமானத்தை இயக்கக் கூடாது, அதுவும் விமானச் சேவை இல்லா சிறிய நகரங்களுக்கு விமானச் சேவை என்று திட்டமிடுகிறார். அப்படி முதல் விமானத்தை வாங்கி சென்னை விமான நிலையத்தில் இறக்க முயன்றால் அதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே தான் ஒரு முன்னாள் விமானப் படை அதிகாரி என்பதால் விமானப் படைக்குச் சொந்தமான விமான தளத்தில் அனுமதியின்றி விமானத்தை இறக்குகிறார்.

அங்கு இவருக்கும் அவரது உயர் அதிகாரிக்கும் முன் பிரச்சனைகள் இருந்தாலும், இவரது கனவு பெரிசு என்பதற்காகப் பழிவாங்குவதை மறந்து உதவுகிறார். சிறிய அபராதம் மட்டும் வசூலிக்கிறார். இதனால் சூர்யா மகிழ்ச்சி அடைந்து மீண்டும் விமான நிறுவனத்தைச் சரி செய்து விமானச் சேவையை தொடங்குகிறார். ஆனால் அங்கு அவரது விமானியை மிரட்டி போட்டி நிறுவனங்களால் பழிவாங்கப்படுகிறார். இவரது விமான நிறுவனத்தின் முதல் விமானமே விபத்துக்குள் ஆகிறது. அதனால் இவரது விமான நிறுவனத்தின் நன்மதிப்பு கேள்விக்குறியாகிறது. பாதுகாப்பு இல்லாத விமான நிறுவனம் என்று பழிக்கு உள்ளாகிறார்.

ஆனாலும் மனம் தளராத சூர்யா, முதல் பயணத்தை நான், எனது அம்மா மற்றும் மனைவி செய்வோம் என்று ஊடகம் ஒன்றில் கூறுகிறார். சென்னை விமான நிலையத்தில் முதல் விமானம் புறப்பட இருக்கிறது ஒரு பயணி கூட வரவில்லை. இதனால் விமான சேவை ரத்தாகிறது. இவர் செல்ல இருந்த விமானம் ரத்தானாலும், மதுரை, விசாகபட்டினம் உள்ளிட்ட பிற நகர விமானங்களில் பயணிகள் பயணிக்கிறனர். அது தெரியாத சூர்யா மக்களுக்கு தன் மீது இருந்த நம்பிக்கை போய்விட்டது என்று வருத்தத்துடன் விமானத்தை விட்டு வெளியில் வர, அவரது நண்பர் தான் டிக்கெட் புக்கிங் செய்வதில் சிறு பிழை செய்துவிட்டேன். அதனால்தான் இந்த விமானத்திற்குப் பயணிகள் டிக்கெட் புக் செய்தும் சீட் கிடைக்கவில்லை. பிற நகர விமான சேவைகள் சரியாக உள்ளன என்கிறார்.

மதுரையில் இருந்து விமானம் சென்னையை வந்தடைகிறது. கிராமத்து மக்கள், சூர்யாவின் அம்மா ஊர்வசி எல்லோரும் விமானத்தில் பயணித்து வந்து சூர்யாவை பாராட்டுகின்றனர். விமானத்தில் உணவு வழங்கும் ஆர்டரை தனது மனைவிக்கு வழங்குகிறார். அதன் மூலம் அவர் லாபம் பார்க்கிறார். இவருக்கு போட்டியாக இருந்த நிறுவனங்கள் இவரை வாங்க முயல்கின்றன. ஆனால் இவர் தனது கனவு நிறைவேறிய சந்தோசத்தில் நண்பர்களுடன் பெருமிதம் கொள்கிறார். இதுதான் சூரைப்போற்று கதை. குடும்பம், பாசம், காதல், ரொமான்ஸ், நட்பு, தொழில் போட்டி என்று பலவற்றையும் பிளேஷ்பேக், பாடல் என்று திரைக்கதை அமைத்துள்ளனர்.

அப்பர்ணா சூர்யாவை பெண் பார்க்க வரும் போது சாவுக்கு குத்தாட்டம் போடும் இடத்தில், வாரனம் ஆயிரம் படத்தில் அஞ்சல பாட்டுக்கு நடமாடும் சூர்யாவை நினைவு படுத்துகிறார். அப்பரணா இறுதிச்சுற்று படத்தில் நடித்த ரித்திகா சிங்கை ஆங்காங்கே நினைவுபடுத்துகிறார். இது இயக்குனர் சுதா கோங்குரா டச் என்பது தெரிகிறது. ஜிவி பிரகாஷ் இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. கருணாஸ், ஞானசம்பந்தன், ஊர்வசி, காளி வெங்கட் என படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் தங்களது பங்கை சரியாக செய்துள்ளனர். டெக்கன் ஏவியேஷன் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை வரலாறு படம் என்றாலும், படத்திற்காக நிறைய மாற்றங்கள் செய்துள்ளனர்.

சூரரைப் போற்று சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஒரு முன்னோடி!

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?