சினிமா
கதைக்காக சம்பளத்தை குறைத்த எஸ்.ஜே.சூர்யா… ஆனாலும் அத்தனை கோடியா?…

அஜித்துக்கு வாலி மற்றும் விஜய்க்கு குஷி என அவர்கள் துவண்டு போயிருந்த காலத்தில் ஹிட் கொடுத்து அவர்களை தூக்கிவிட்டவர் எஸ்.ஜே.சூர்யா. அதன் நியூ, அ ஆ, இசை ஆகிய படங்களை இயக்கி நடித்தார். ஆனால், ரசிகர்களை பெரிதாக கவரவில்லை.
எனவே, நடிகராக மாறினார். விஜய் நடித்த மெர்சல் படத்தில் அசத்தல் வில்லனாக நடித்து தன்னை ஒரு சிறந்த நடிகர் என நிரூபித்தார். தற்போது சிம்பு நடித்த மாநாடு படத்தில் அசத்தல் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். மாநாடு படத்தின் வெற்றிக்கே அவர்தான் காரணம் என பலரும் கூறும் அளவுக்கு அவரின் நடிப்பு அசத்தலாக இருந்தது.

தற்போது விஷால் நடிக்கவுள்ள புதிய படமான மார்க் ஆண்டனி படத்தில் வில்லனாக நடிக்க எஸ்.ஜே சூர்யாவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இப்படத்தின் கதை பிடித்துப்போனதால் ‘கடவுளே எல்லா நல்ல கதையையும் என்கிட்டவே அனுப்புறியே’ என டிவிட்டரில் பதிவிட்டார் எஸ்.ஜே.சூர்யா.
அதேநேரம், 2 கோடி வாங்கி கொண்டிருந்த அவர் மாநாடு வெற்றிக்கு பின் தனது சம்பளத்தை ரூ.6 கோடியாக ஏற்றிவிட்டார். ஆனால், மார்க் ஆண்டனி பட தயாரிப்பு நிறுவனம் அவருக்கு ரூ.4 கோடி மட்டுமே கொடுக்க முன் வந்தது. இதற்கு எஸ்.ஜே. சூர்யா ஒப்புக்கொள்ளவில்லை. ஆனாலும், கதை பிடித்திருந்ததால் ரூ.5 கோடி சம்பளம் பேசி இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம்.























