சினிமா செய்திகள்
பிரின்ஸ் சிவகார்த்திகேயனுக்கு ஏற்ற டைட்டில்: ‘எஸ்கே 20’ பர்ஸ்ட்லுக் போஸ்டர் இதோ!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 20-வது படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதையும் பார்த்தோம்.
முதல்முறையாக தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் சிவகார்த்திகேயன் படம்ள் உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் என்பவர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி விட்டது. இந்த படத்திற்கு ’பிரின்ஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனை அவரது ரசிகர்கள் பிரின்ஸ் என்றுதான் அழைத்து வரும் நிலையில் அந்த டைட்டிலே அவருடைய படத்திற்கும் டைட்டிலாக அமைந்து விட்டதை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாட்டம் அடைந்து வருகின்றனர்.
இந்த படத்தின் டைட்டில் அட்டகாசமாக இருப்பதாகவும் கையில் ஒரு உலக உருண்டையுடன் பின்னணியில் உலக வரைபடத்துடன் இருக்கும் இந்த பர்ஸ்ட் போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரின்ஸ் திரைப்படத்தில் உக்ரைன் நாட்டுமரியா போஷாப்கா சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்திருப்பதாகவும் மேலும் ஒரு முக்கிய வேடத்தில் சத்யராஜ்நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எஸ்எஸ் தமன் இசையமைப்பில் உருவாகும் இந்த படம் காமெடி மற்றும் ரொமான்ஸ் கதையம்சம் கொண்டது என்று கூறப்படுகிறது.