சினிமா செய்திகள்
Mam to Wife: திருமணம் முடிந்ததும் விக்னேஷ் சிவன் பதிந்த நெகிழ்ச்சியான பதிவு

நயன்தாராவை முதலில் Mam என்று அழைத்துக் கொண்டு இருந்தேன் என்றும் தற்போது அவர் எனக்கு மனைவி ஆகி உள்ளார் என்றும் திருமணம் முடிந்த சில மணி நேரங்களில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான ஒரு பதிவை பதிவு செய்துள்ளார் .
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா திருமணம் இன்று சென்னை அருகே உள்ள மகாபலிபுரத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில் திருமணம் முடிந்த சில மணி நேரங்களில் திருமணம் குறித்த புகைப்படங்களை பதிவு செய்ததே விக்னேஷ் சிவன், நயன்தாராவை முதலில் Mam என்று அதன் பின்னர் காதம்பரி என்றும் தங்கமே என்றும் எனது உயிர் என்றும் அழைத்தேன்.
கடைசியாக என் கண்மணி என்று அழைத்த நான் தற்போது அவரை மனைவி என்று அழைக்கிறேன் என்று பதிவு செய்திருந்தர். மேலும் திருமணம் குறித்த புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.