சினிமா செய்திகள்
சிம்பு-கெளதம்மேனன் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது என்பதும் இந்த படத்தை வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தற்போது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இந்த படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு, ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும் கவிஞர் தாமரை பாடல்கள் எழுத இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தின் அட்டகாசமான டைட்டில் போஸ்டரும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், மிக விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது.
மேலும் இந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவலும் மிக விரைவில் படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் இந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன
It’s all making sense now.
Happy to announce the title …@arrahman @SilambarasanTR_ @IshariKGanesh @VelsFilmIntl #SilambarasanTR47 pic.twitter.com/iLaKfe4XZI— Gauthamvasudevmenon (@menongautham) February 25, 2021