சினிமா செய்திகள்
ரஜினி-லதா 40வது திருமண நாள்: ரசிகர்கள் வாழ்த்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ஆகியோர் திருமணம் நடந்து நாற்பது ஆண்டுகள் ஆனதை அடுத்து அவரது ரசிகர்கள் திருமண நாளை கொண்டாடி வருகின்றனர்.
கடந்த 1981-ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் லதாவை காதலித்து திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து ரஜினி லதா திருமணம் நடந்து இன்றுடன் 40 ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து ரசிகர்கள் இது குறித்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து கொண்டாடி வருகின்றனர்.
மேலும் ரஜினி-லதா தம்பதிக்கு திரையுலக பிரமுகர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ரஜினி-லதா குறித்த ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ரஜினி தனது மனைவி லதா மற்றும் இரண்டு மகள்களுடன் இன்று தனது திருமண நாளை போயஸ் கார்டன் வீட்டில் கொண்டாட இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.




















